முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து
Updated on
1 min read

செஸ்டர் லீ ஸ்ட்ரீட்: இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 48.1 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹாரி புரூக் 69 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்தார். வில் ஜேக்ஸ் 46, ஜோ ரூட் 44, பென் டக்கெட் 32 ரன்கள் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் அஷிதா பெர்னாண்டடோ, சச்சிந்து கொலம்பகே ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

266 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 37 ஓவர்களில் 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக துனித் வெல்லாலகே 45, கேப்டன் குஷால் மெண்டிஸ் 42 ரன்கள் சேர்த்தனர். 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து
அர்ஜெண்டினா அணிக்காக கடைசி சர்வதேச போட்டியில் சிறப்பு ஜெர்ஸி அணிந்து ஆடும் மெஸ்ஸி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in