இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் நியூஸிலாந்து அணி

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் நியூஸிலாந்து அணி
Updated on: 
2 min read

கிறைஸ்ட்சர்ச்: இந்​தியா - நியூஸிலாந்து அணிகள் இடை​யி​லான கடைசி மற்​றும் 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி கிறைஸ்ட்​சர்ச் நகரில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் நியூஸிலாந்து அணி 346 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக டாம் பிளண்​டல் 89, டாம் லேதம் 59 ரன்கள் சேர்த்​தனர்.

இதையடுத்து விளை​யாடிய இந்​திய அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 46 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 116 ரன்​கள் எடுத்​தது. யஷஸ்வி ஜெய்ஸ்​வால் 0, தேவ்​தத் படிக்​கல் 21, ஷுப்​மன் கில் 17, ரிஷப் பந்த் 23, கே.எல்.ராகுல் 25, வாஷிங்​டன் சுந்​தர் 10 ரன்களில் ஆட்​ட​மிழந்​தனர்.

துருவ் ஜூரல் 7 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தார். நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை இந்​திய அணி தொடர்ந்து விளை​யாடியது. ஆல்​ரவுண்​டரான அன்​ஷுல் கம்​போஜ் எந்​த​வித போராட்ட குணத்​தையும் வெளிப்​படுத்​தாமல் மேட் ஹென்றி வீசிய பந்​தில் ரன் ஏதும் எடுக்​காமல் ஆட்​ட​மிழந்​தார். இதையடுத்து களமிறங்​கிய ஆகாஷ் தீப் உறுதுணை​யுடன் துருவ் ஜூரல் பார்ட்னர்​ ஷிப்பை கட்​டமைக்க முயன்​றார்.

பொறுப்​புடன் விளை​யாடிய துருவ் ஜூரல் 100 பந்​துகளில், 8 பவுண்​டரி​களு​டன் தனது 3-வது அரை சதத்தை கடந்​தார். மறுமுனை​யில் தாக்​குப்​பி​டித்து விளை​யாடிய ஆகாஷ் தீப் 52 பந்​துகளில், 4 பவுண்​டரி​களு​டன் 29 ரன்​கள் எடுத்த நிலை​யில் நேதன் ஸ்​மித் பந்​தில் டாம் பிளண்​டலிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

இந்த ஜோடி 8-வது விக்​கெட்​டுக்கு 74 பந்​துகளில், 46 ரன்​கள் சேர்த்​தது. இதையடுத்து களமிறங்​கிய குர்​னூர் பிரார் தடுப்​பாட்​டத்​தில் கவனம் செலுத்த மறுமுனை​யில் துருவ் ஜூரல் சீராக ரன்​கள் சேர்க்க முயன்​றார். குர்​னூர் பிரார் 46 பந்​துகளில், ஒரு பவுண்​டரியுடன் 10 ரன்​கள் எடுத்த நிலை​யில் கைல் ஜேமிசன் பந்​தில் போல்​டானார். 9-வது விக்​கெட்​டுக்கு இந்த ஜோடி 126 பந்​துகளில் 64 ரன்​கள் சேர்த்​தது.

இதன் காரண​மாகவே இந்​திய அணி​யால் 200 ரன்​களை கடக்க முடிந்​தது. 4.15 மணி நேரம் களத்​தில் நின்று போராடிய துருவ் ஜூரல் 170 பந்​துகளில், 14 பவுண்​டரி​களு​டன் 88 ரன்​கள் எடுத்த நிலை​யில் கைல் ஜேமிசன் பந்​தில் டாம் பிளண்​டலிடம் கேட்ச் கொடுத்து வெளியேற இந்​திய அணி 86.1 ஓவர்​களில் 246 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. ஜஸ்பிரீத் பும்ரா 4 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தார்.

பின்​கள வீரர்​களான ஆகாஷ் தீப், குர்​னூர் பிரார், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரது துணை​யுடன் கடைசி 3 விக்​கெட்​களுக்கு துருவ் ஜூரல் 129 ரன்​கள் சேர்த்​தார். இதில் 14 பவுண்​டரி​களை துருவ் ஜூரல் அடித்​தார். பந்​தின் நீளத்​தைக் கணித்து, அடிக்​காமல் விட வேண்​டிய பந்​துகளைச் சரியாகத் தவிர்த்த அவரது அணுகுமுறை பாராட்​டும் வகை​யில் இருந்​தது. பொறுமையும், சரியான நுட்​பமும் அவரது ஆட்​டத்​தில் வெளிப்​பட்​டது.

நியூஸிலாந்து அணி தரப்​பில் கைல் ஜேமிசன் 4 விக்​கெட்​களை வீழ்த்​தினார். மேட் ஹென்றி, நேதன் ஸ்​மித், ஜேக்​கப் டஃபி ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர். 110 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய நியூஸிலாந்து அணி நேற்​றைய 3-வது நாள் ஆட்டத்​தின் முடி​வில் 46 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 133 ரன்​கள் எடுத்​தது.

டாம் லேதம் 8 ரன்​கள் எடுத்த நிலை​யில் பும்ரா பந்​தில் போல்​டானார். ஹென்றி நிக்​கோல்ஸ் 42 பந்​துகளில், 22 ரன்​கள் எடுத்த நிலை​யில் பும்ரா பந்​தில் அவரிடமே பிடிகொடுத்து நடையை கட்​டினார். தனது 15-வது அரை சதத்தை கடந்த டெவன் கான்வே 97 பந்​துகளில், 6 பவுண்​டரி​களு​டன் 51 ரன்​கள் எடுத்த நிலை​யில் வாஷிங்​டன் சுந்​தர் பந்​தில், பேக்​வேர்டு பாயின்ட் திசையில் நின்ற ஜெய்ஸ்வாலின் அற்​புத​மான கேட்ச் காரண​மாக ஆட்​ட​ம் இழந்​தார்.

ரச்​சின் ரவீந்​திரா 84 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் 46 ரன்​களும், டேரில் மிட்​செல் 38 பந்​துகளில், 5 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் உள்​ளனர். 243 ரன்​கள் முன்​னிலை பெற்​றுள்ள நியூஸிலாந்து அணி கைவசம் 7 விக்​கெட்​கள் உள்ள நிலை​யில் இன்று 4-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடு​கிறது.

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் நியூஸிலாந்து அணி
6 மாநிலங்களில் 400 மக்களவைத் தொகுதிகள்: உ.பி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் வென்றால் ஆட்சியில் அமரலாம்

X