ஆஸ்​திரேலிய ஓபன் டென்​னிஸ்: எலினா ரைபகினா சாம்​பியன்

ஆஸ்​திரேலிய ஓபன் மகளிர் ஒற்​றையர் பிரி​வில் பட்டம் வென்ற எலினா ரைபகினா

ஆஸ்​திரேலிய ஓபன் மகளிர் ஒற்​றையர் பிரி​வில் பட்டம் வென்ற எலினா ரைபகினா

Updated on
1 min read

மெல்​பர்ன்: ஆஸ்​திரேலிய ஓபன் கிராண்ட்​ஸ்​லாம் டென்​னிஸ் போட்​டி​யின் மகளிர் ஒற்​றையர் பிரி​வில் கஜகஸ்​தான் வீராங்​கனை எலினா ரைபகினா சாம்​பியன் பட்​டத்தை வென்​றார்.

ஆண்​டின் முதல் கிராண்ட்​ஸ்​லாம் போட்​டி​யான ஆஸ்​திரேலிய ஓபன் டென்​னிஸ் மெல்​பர்ன் நகரில் நடை​பெற்று வரு​கிறது. நேற்று நடை​பெற்ற மகளிர் ஒற்​றையர் பிரிவு இறு​திச் சுற்​றில் முதல் நிலை வீராங்​க​னை​யும், பெலாரஸைச் சேர்ந்​தவரு​மான அரினா சபலென்கா​வும், 5-ம் நிலை வீராங்​க​னை​யான எலினா ரைபகி​னா​வும் மோதினர்.

இதில் எலினா ரைபகினா 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்​கில் அரினா சபலென்​காவை வீழ்த்தி ஆஸ்​திரேலிய ஓபன் பட்​டத்தை வென்​றார்.

அவர் முதன்​முறை​யாக ஆஸ்​திரேலிய ஓபனில் பட்​டம் வென்​றுள்​ளார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. மேலும், அவர் தனது 2-வது கிராண்ட்​ஸ்​லாம் பட்​டத்​தை​யும் கைப்​பற்​றி​யுள்​ளார். இதற்கு முன்பு 2022-ல் அவர் விம்​பிள்​டன் ஓபனின் மகளிர் ஒற்​றையர் பிரி​வில் பட்​டத்தை வென்​றிருந்​தார்.

போட்​டி​யின் முதல் செட்​டில் மிகச்​சிறப்​பாக விளை​யாடிய ரைபகினா செட்டை 6-4 என்ற கணக்​கில் கைப்​பற்​றி​னார். ஆனால், 2-வது செட்​டில் அரினா சபலென்கா சுதா​ரித்து விளை​யாடி அந்த செட்டை 6-4 என்ற கணக்​கில் வென்​றார்.

இதனால் வெற்​றியைத் தீர்​மானிக்​கும் 3-வது செட்​டில் அனல் பறக்​கும் போட்டி நடை​பெற்​றது. இருந்​த​போதும் அரினா சபலென்​கா​வின் சர்​வீஸ்​களை எளி​தில் முறியடித்த ரைபகினா 6-4 என்ற கணக்​கில் கைப்​பற்றி சாம்​பியன் பட்​டத்தை தனதாக்​கிக் கொண்​டார். 2 மணி நேரம் 18 நிமிடங்​களில் இந்த ஆட்​டம் முடிவுக்கு வந்தது.

இந்​தப் போட்​டி​யில் பட்​டம் வென்​றதன் மூலம் எலினா ரைபகினா 2 ஆயிரம் டபிள்​யூடிஏ புள்​ளி​களை​யும் பெற்​றுள்​ளார். 2-வது இடம் பிடித்த அரினா சபலென்கா​வுக்கு 1,300 புள்​ளி​கள் கிடைத்​துள்​ளன.

பரிசுத்​தொகை: இந்​தப் போட்​டி​யில் பட்​டம் வென்​றதன் மூலம் சுமார்​ ரூ.26 கோடி பரிசை ரைபகி​னா வென்​றுள்​ளார்​. 2-ம்​ இடம்​ பிடித்​த அரி​னா சபலென்கா​வுக்​கு சுமார்​ ரூ.13 கோடி பரிசு கிடைத்​துள்​ளது.

<div class="paragraphs"><p>ஆஸ்​திரேலிய ஓபன் மகளிர் ஒற்​றையர் பிரி​வில் பட்டம் வென்ற எலினா ரைபகினா</p></div>
“பாப்பாவையும் பாட்டியையும் போதை ஆசாமிகள் சீரழிக்கும் நிலை” - பழனிசாமி குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in