

லண்டன்: இங்கிலாந்தில் நடைபெறும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் இடம் பெற்றுள்ள லண்டன் ஸ்பிரிட் அணியின் ஆலோசகர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ‘டிகே’ என அழைக்கப்படும் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதே பணியை இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர், ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக செய்துள்ளார்.
2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற 40 வயதான தினேஷ் கார்த்திக் அதன் பின்னர் மற்ற நாடுகளில் நடைபெறும் லீக்கில் பங்கேற்று வருகிறார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஐஎல்டி20 தொடரில் ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்காகவும், தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ 20 தொடரில் பாருல் ராயல்ஸ் அணிக்காகவும் தினேஷ் கார்த்திக் விளையாடி இருந்தார்.