நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட்

துருவ் ஜூரல் பொறுப்பான ஆட்டம்
இந்திய வீரர் துருவ் ஜூரல்

இந்திய வீரர் துருவ் ஜூரல்

Updated on: 
2 min read

கிறைஸ்ட்சர்ச்: இந்​தியா - நியூஸிலாந்து அணிகள் இடை​யி​லான கடைசி மற்​றும் 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி கிறைஸ்ட்​சர்ச் நகரில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் நாள் ஆட்​டத்​தில் நியூஸிலாந்து அணி 85 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 246 ரன்​கள் எடுத்​தது. டாம் லேதம் 59, டெவன் கான்வே 31, டேரில் மிட்​செல் 31 ரன்​கள் சேர்த்​தனர்.

டாம் பிளண்​டல் 53, கிளென் பிலிப்ஸ் 36 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய நியூஸிலாந்து அணி 116.3 ஓவர்​களில் 356 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. கிளென் பிலிப்ஸ் 36 ரன்​களில் அன்​ஷுல் கம்​போஜ் பந்​தில் ரிஷப் பந்த்​திடம் பிடிகொடுத்து வெளியேறினார். நேதன் ஸ்​மித் 26, கைல் ஜேமிசன் 19, மேட் ஹென்றி 19 ரன்​களில் ஆகாஷ் தீப் பந்​தில் நடையை கட்​டினர். பொறுமையாக விளை​யாடிய டாம் பிளண்​டல் 211 பந்​துகளில், 10 பவுண்​டரி​களு​டன் 89 ரன்​கள் எடுத்த நிலை​யில் குர்​னூர் பிரார் பந்​தில் கடைசி வீரராக ஆட்​ட​மிழந்​தார்.

இந்​திய அணி தரப்​பில் ஆகாஷ் தீப் 5 விக்​கெட்​களை வீழ்த்​தினார். அன்​ஷுல் கம்​போஜ், குர்​னூர் பிரார் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர். வாஷிங்​டன் சுந்​தர் ஒரு விக்​கெட் வீழ்த்​தினார். ஜஸ்பிரீத் பும்ரா 26 ஓவர்​களை வீசி 6 மெய்​டன்​களு​டன் 49 ரன்​களை விட்​டுக்​கொடுத்த நிலை​யில் விக்​கெட் ஏதும் கைப்​பற்​றவில்லை.

இதையடுத்து பேட்​டிங்கை தொடங்​கிய இந்​திய அணிக்கு தொடக்​கமே அதிர்ச்​சி​யாக இருந்​தது. மேட் ஹென்றி வீசிய முதல் ஓவரின் கடைசி பந்​தில் யஷஸ்வி ஜெய்ஸ்​வால் ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் போல்​டானார். இதையடுத்து களமிறங்​கிய தேவ்​தத் படிக்​கல் அதிரடி​யாக விளை​யாட முயன்​றார்.

மட்​டையை சுழற்​றிய தேவ்​தத் படிக்​கல் 20 பந்​துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்​டரியுடன் 21 ரன்​கள் எடுத்த நிலை​யில் கைல் ஜேமிசன் பந்​தில், விக்​கெட் கீப்​பர் டாம் பிளண்​டலிடம் பிடிகொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்​கிய கேப்​டன் ஷுப்​மன் கில்​லும் அவசரகதி​யில் விளை​யாடி விக்​கெட்டை பறிகொடுத்​தார். 29 பந்​துகளை சந்​தித்த ஷுப்​மன் கில் 3 பவுண்​டரி​களு​டன் 17 ரன்​கள் எடுத்த நிலை​யில் கைல் ஜேமிசன் பந்​தில் 2-வது சிலிப் திசையில் நின்ற டாம் லேதமிடம் பிடிகொடுத்து நடையை கட்​டினார்.

53 ரன்​களுக்கு 3 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் களமிறங்​கிய ரிஷப் பந்த் பொறுப்​பின்றி விளை​யாடி தனது விக்​கெட்டை எளிதாக பறிகொடுத்​தார். ஜேக்​கப் டஃபி வீசிய பந்தை ரிஷப் பந்த் விளாசிய போது பாயிண்ட் திசையில் உயர​மாக சென்று கைல் ஜேமிசனிடம் கேட்ச் ஆனது. 39 பந்​துகளை எதிர்​கொண்ட ரிஷப் பந்த் ஒரு சிக்​ஸர், ஒரு பவுண்​டரியுடன் 23 ரன்​கள் சேர்த்​தார். சற்று நிலைத்து நின்று பேட் செய்த கே.எல்.ராகுல் 80 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 25 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜேக்​கப் டஃபி பந்​தில் பாயிண்ட் திசையில் நின்ற டெவன் கான்​வேயிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து தடுப்​பாட்​டத்​தில் கவனம் செலுத்​திய வாஷிங்​டன் சுந்​தர் 60 பந்​துகளில், 10 ரன்​கள் எடுத்த நிலை​யில் நேதன் ஸ்​மித் பந்​தில், 2-வது சிலிப் திசையில் நின்ற டாம் லேதமின் அற்​புத​மான கேட்ச் காரண​மாக ஆட்​ட​மிழந்​தார். 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் இந்​திய அணி 46 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 116 ரன்​கள் எடுத்​தது.

துருவ் ஜூரல் 45 பந்​துகளில், ஒரு பவுண்​டரியுடன் 7 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் களத்​தில் இருந்​தார். நியூஸிலாந்து அணி தரப்​பில் கைல் ஜேமிசன், ஜேக்​கப் டஃபி ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். மேட் ஹென்றி, நேதன் ஸ்​மித் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர். கைவசம் 4 விக்​கெட்​கள் இருக்க 240 ரன்​கள் பின்​தங்​கி​யுள்ள இந்​திய அணி இன்று 3-வது நாள் ஆட்​டத்தை எதிர்​கொண்டது.

3-வது நாள் ஆட்டம்: துருவ் ஜூரல் அபாரம்

116 ரன்களுக்கு 6 விக்கெட்களை இந்தியா இழந்து தடுமாறிய நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியது. அன்ஷுல் கம்போஜ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

இதன் பின்னர் 8-வது விக்கெட்டுக்கு ஆகாஷ் தீப் உடன் இணைந்து துருவ் ஜூரல், 46 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஆகாஷ் தீப் 52 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களத்துக்கு வந்த குர்னூர் பிரார் உடன் இணைந்து 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் துருவ் ஜூரல். குர்னூர் பிரார் 10 ரன்களில் வெளியேறினார்.

170 பந்துகளில் 88 ரன்கள் எடுத்த நிலையில் ஜேமிசன் பந்தில் துருவ் ஜூரல் ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 86.1 ஓவரில் 246 ரன்கள் எடுத்தது. நியூஸிலாந்து அணியை காட்டிலும் இந்தியா முதல் இன்னிங்ஸில் 110 ரன்கள் பின்தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>இந்திய வீரர்&nbsp;துருவ் ஜூரல்</p></div>
ஹரியானாவில் ரவுடி கும்பல் தலைவன் உட்பட 4 பேர் சுட்டுக் கொலை

X