ஹரியானாவில் ரவுடி கும்பல் தலைவன் உட்பட 4 பேர் சுட்டுக் கொலை

எதிர் கும்பலைச் சேர்ந்த பெண்ணின் காதல் வலையில் சிக்கியது அம்பலம்
ஹரியானாவில் ரவுடி கும்பல் தலைவன் உட்பட 4 பேர் சுட்டுக் கொலை
Updated on: 
1 min read

ரோத்தக்: ஹரியானா மாநிலத்​தில் பிரபல ரவுடி​களான அங்​கித் பாபா மற்​றும் ஹிமான்ஷு பாவ் ஆகிய இரு​வருக்​கும் இடையே கடந்த 7 ஆண்​டுகளாக பகை இருந்து வரு​கிறது. அங்​கித் பாபாவின் சகோ​தரரான சன்னி ரிடோலியா, தற்​போது பாபா கும்​பலை வழிநடத்தி வரு​வ​தாகத் தெரி​கிறது.

இந்​நிலை​யில், உத்தர பிரதேச மாநிலம் ஷாம்​லியைச் சேர்ந்த ஜான்வி சவுத்ரி என்ற பெண்​ணின் குடும்​பத்​தினருக்கு, மற்​றொரு கும்​பலுடன் ஏற்​பட்ட பகை காரண​மாக, ஜான்வி, பாவ் கும்​பலுடன் தொடர்பு ஏற்​படுத்​தி​ய​தாகக் கூறப்​படு​கிறது. இதற்கு பிரதிபலனாக, ஜான்வி மூலம் பாபா கும்​பலை பழிவாங்க, பாவ் கும்​பல் திட்​ட​மிட்​டது. இதையடுத்து, சன்​னியை கடந்த 25-ம் தேதி இரவு ஹரியானாவின் ரோத்​தக்​கில் உள்ள மில்​டன் ஓட்​டலுக்கு ஜான்வி அழைத்து வந்​தார். பின்​னர், அந்த ஓட்​டலின் இருப்​பிடத்தை பாவ் கும்​பலுக்கு தெரி​வித்​துள்​ளார்.

இதையடுத்து, ஆயுதங்​களு​டன் வந்த அந்த கும்​பல் ஓட்​டலுக்​குள் புகுந்து சர​மாரியாகத் துப்​பாக்​கி​யால் சுட்​டனர். இதில் சன்னி உட்​பட 4 பேர் உயி​ரிழந்​தனர். இது​குறித்து போலீ​ஸார் கூறிய​தாவது:

இன்ஸ்டாகிராம் மூலம் ஜான்​விக்கு, சன்​னியுடன் பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது. கடந்த 3 மாதங்​களாக இரு​வரும் தொடர்ந்து பேசி வந்​ததுடன், நேரிலும் சந்​தித்து வந்​துள்​ளனர். சன்​னி​யின் நம்​பிக்​கையைப் பெறு​வதற்​காகவே ஜான்வி அவருடன் நெருக்​க​மாகப் பழகி உள்​ளார். சன்னி எப்​போதும் குண்டு துளைக்​காத காரில் பயணித்து வந்​ததால், அவரை நேரடி​யாகக் குறிவைத்​துத் தாக்​கு​வது சிரமமாக இருந்​ததால், ஓட்​டலுக்​குள் அழைத்​துச் சென்று சுட்​டுக் கொல்​லப்​பட்​டுள்​ளார்.

துப்​பாக்​கிச்​சூடு முடிந்​ததும் ஜான்வி அங்​கிருந்து தாய்​லாந்​தின் பாங்​காக் நகருக்​குச் தப்பிச் சென்று விட்​டது தெரிய வந்​தது. இந்​தச் சதித்​திட்​டத்​துக்கு உதவியதற்​குப் பிரதிபலனாக, ஜான்​வியை வெளி​நாட்​டில் குடியேறச் செய்ய, ஹிமான்ஷு பாவ் கும்​பல் உதவி செய்​துள்​ளது. இது​குறித்து விசா​ரணை நடத்​தப்​பட்டு வரப்​படு​கிறது. இவ்​வாறு போலீஸார் கூறினர்.

ஹரியானாவில் ரவுடி கும்பல் தலைவன் உட்பட 4 பேர் சுட்டுக் கொலை
சீனாவை வீழ்த்தியது இந்தியா: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் 5-வது முறையாக சாம்பியன்

X