

வதோதரா: இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியையொட்டி இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டார்.
அப்போது அவர், வயிற்று பகுதியின் பக்கவாட்டில் அசவுகரியத்தை உணர்ந்தார். இதையடுத்து அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதுதொடர்பாக பிசிசிஐ மருத்துவக்குழு, நிபுணருடன் ஆலோசனை நடத்தியது. இதில் ரிஷப் பந்த், தசை வலியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர், நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இருந்து விலகி உள்ளார். ரிஷப் பந்துக்கு பதிலாக இந்திய அணியில் துருவ் ஜூரெல் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய அணியின் தேர்வுக்கு அறிவித்துள்ளது.