வேகமாக குணமடைந்து வருகிறார் தோனி: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் தகவல்

வேகமாக குணமடைந்து வருகிறார் தோனி: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் தகவல்
Updated on
1 min read

ஹைதராபாத்: சென்னை சூப்​பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் நட்​சத்​திர வீரர் எம்​.எஸ்​.தோனி வேக​மாக குணமடைந்து வரு​கிறார் என்று அணி​யின் பேட்​டிங் பயிற்சி​யாளர் மைக்​கேல் ஹஸ்ஸி தெரி​வித்​தார்.

இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி இது​வரை 6 ஆட்டங்களில் விளை​யாடி​யுள்​ளது. ஆனால், காயம் காரண​மாக எம்​.எஸ்​.தோனி இது​வரை சி எஸ்கே அணிக்காக விளை​யாட​வில்​லை. இது சென்னை ரசிகர்களை மிக​வும் ஏமாற்​றத்​துக்கு உள்​ளாக்​கி​யுள்​ளது.

இதுகுறித்து அணி​யின் பேட்​டிங் பயிற்​சி​யாளர் மைக்​கேல் ஹஸ்ஸி கூறிய​தாவது: தோனி​யின் காயத்​துக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்​டுள்​ளது. அவர் வேக​மாக குணமடைந்து வருகிறார். நேற்று முன்​தினம் நடை​பெற்ற வலைப்​பயிற்சியின்​போது அவர் பேட்​டிங் செய்​தார். அவர் சிறப்பாக பேட்​டிங் செய்​கிறார்.

இது எனக்கு மிக​வும் மகிழ்ச்​சியை அளிக்​கிறது. அவர் வேகமாக குணமடைந்து வரு​வதை இது காட்​டு​கிறது. மேலும், ஆடு​களத்​தில் அவர் ஓடி பயிற்சி எடுப்​ப​தை​யும் பார்த்​தேன். தனது ஓடும் திறனை மேம்​படுத்​தும் பணி​யில் தோனி ஈடு​பட்​டுள்​ளார். இன்​னிங்​ஸின் இறு​தி​கட்​டத்​தில் பேட்​டிங் செய்ய நேர்ந்​தால், இரண்டு ரன்​கள் எடுக்​கும் நிலை வரும்​போது வேக​மாக ஓட வேண்​டி​யிருக்​கும்.

அவர் தனது ஓடும் திறனில் நம்​பிக்​கை​யைப் பெற​வும், அந்த வேகத்தை வளர்த்​துக்​கொள்​ள​வும் மட்​டுமே இப்​போது பயிற்சி பெறுகிறார். அவர் எப்​போது அணிக்​குத் திரும்பி விளை​யாடு​வார் என்​பது எனக்​குத் தெரி​யாது; ஆனால், ரசிகர்​களைப் போலவே நானும், அது கூடிய விரை​வில் நடக்​கும் என்று நம்​பு​கிறேன். இவ்​வாறு மைக்​கேல் ஹஸ்​ஸி தெரி​வித்​தார்​.

வேகமாக குணமடைந்து வருகிறார் தோனி: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் தகவல்
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in