நீச்சலில் தனுஷ், ஸ்ரீநிதி சாதனை

நீச்சலில் தனுஷ், ஸ்ரீநிதி சாதனை
Updated on
1 min read

சென்னை: 80-வது மாநில சீனியர் நீச்சல் போட்டி சென்னை எஸ்ஆஎம் கல்​லூரி வளாகத்​தில் உள்ள நீச்​சல் குளத்​தில் நடைபெற்று வரு​கிறது. தொடக்க நாளான நேற்று ஆடவருக்​கான 50 மீட்​டர் பிரஸ்ட்​ரோக் பிரி​வில் எஸ்​டிஏடி சென்னை அணி வீரர் தனுஷ் சுரேஷ் பந்தய தூரத்தை 28.40 வினாடிகளில் கடந்து எஸ்டிஏடி டால்ஃபின் அணி வீரர் யாதேஷ் பாபு​வின் பழைய சாதனை​யான 28.57 வினாடிகளை முறியடித்து புதிய சாதனை படைத்​தார்.

மகளிருக்​கான 200 மீட்​டர் பிரஸ்ட்​ரோக் நீச்​சலில் எஸ்​டிஏடி சென்னை அணி வீராங்​கனை ஸ்ரீநிதி நடேசன் பந்தய தூரத்தை 2 நிமிடம் 45.71 வினாடிகளில் கடந்து டர்ட்​டில்ஸ் அணி வீராங்​கனை ராக​வி​யின் 2 நிமிடம் 49.13 வினாடிகள் என்ற சாதனையை முறியடித்து புதிய மீட் சாதனை படைத்​துள்​ளார்​.

நீச்சலில் தனுஷ், ஸ்ரீநிதி சாதனை
‘நீங்கள் முதல்வர் ஆனதையே மறந்துவிட்டு...’ - திருச்சியில் பேசிய விஜய் மீது திமுக தாக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in