ஐபிஎல்: டெல்லி அணி​யின் பீல்​டிங் கோச் ஜான் மூனி

ஐபிஎல்: டெல்லி அணி​யின் பீல்​டிங் கோச் ஜான் மூனி
Updated on
1 min read

புதுடெல்லி: ஐபிஎல் தொடரில் டெல்லி கே​பிடல்ஸ் அணியின் பீல்​டிங் பயிற்​சி​யாள​ராக அயர்​லாந்து அணியின் முன்​னாள் ஆல்​ர​வுண்​ட​ரான ஜான் மூனி நியமிக்​கப்​பட்​டுள்​ளார். ஐபிஎல் தொடரில் அயர்​லாந்தை சேர்ந்​தவர் பயிற்​சி​யாள​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ளது இதுவே முதன்முறை.

44 வயதான ஜான் மூனி கடந்த 2018-2019 காலக்​கட்​டத்​தில் ஆப்​கானிஸ்​தான் அணி​யின் பீல்​டிங் பயிற்​சி​யாள​ராக பணி​யாற்றி இருந்​தார். மேற்கு இந்​தி​யத் தீவு​கள் மற்​றும் அயர்​லாந்து மகளிர் அணி​யிலும் ஜானி மூனி பணி​யாற்றி உள்​ளார். அயர்​லாந்து அணிக்​காக ஜான் மூனி 2006 முதல் 2015-ம் ஆண்டு வரையி​லான காலக்​கட்​டத்​தில் 64 ஒரு​நாள் போட்டி, 27 டி20 போட்டிகளில் பங்கேற்றிருந்தார்.

ஐபிஎல்: டெல்லி அணி​யின் பீல்​டிங் கோச் ஜான் மூனி
கிம் வென்ற ‘கதை’ - இது வடகொரிய தேர்தல் கூத்து!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in