

கொழும்பு: ஆடவருக்கான ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2026-ம் ஆண்டு பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
இந்தத் தொடரில் இலங்கை அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமன் ஆகிய அணிகளும் உள்ளன. இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான 25 பேர் கொண்ட முதற்கட்ட அணியை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கேப்டன் பதவியில் இருந்து சரித் அசலங்கா நீக்கப்பட்டு தசன் ஷனகா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அணி விவரம்: தசன் ஷனகா (கேப்டன்), பதும் நிஸ்ஸங்கா, குசால் மெண்டிஸ், கமில் மிஷாரா, குசால் பெரேரா, தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா, ஜனித் லியனகே, சரித் அசலங்கா, கமிந்து மெண்டிஸ், பவன் ரத்நாயக்கே, சஹான் ஆராச்சிகே, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லலகே, மிலன் ரத்நாயக்கே, நுவன் துஷாரா, இஷான் மலிங்கா, துஷ்மந்த சமீரா, பிரமோத் மதுஷன், மதீஷா பதிரனா, தில்ஷான் மதுஷங்கா, மஹீஸ் தீக் ஷனா, துஷான் ஹேமந்தா, விஜயகாந்த் வியாஸ்காந்த், ட்ரவீன் மேத்யூ.