

டேமியன் மார்ட்டின்
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டேமியின் மார்ட்டின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கோல்ட் கோஸ்ட் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூளைக்காய்ச்சல் காரணமாக 10 நாட்களுக்கு முன்பு, டேமியன் மார்ட்டின் பிரிஸ்பேனிலுள்ள கோல்ட் கோஸ்ட் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் கோமா நிலைக்குச் சென்றார்.
மருத்துவர்கள் அளித்த தொடர் சிகிச்சையின் காரணமாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் அவர் கோமா நிலையிலிருந்து தேறி மீண்டு வந்துள்ளார். அவர் தனது குடும்பத்தாருடன் பேசி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.