சிறையில் உள்ள குர்மீத் ராமுக்கு 15-வது முறையாக பரோல்

குர்மீத் ராம் ரஹிம் சிங்

குர்மீத் ராம் ரஹிம் சிங்

Updated on
1 min read

சண்டிகர்: ஹரியானாவில் செயல்படும் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங்.

ஹரியானா மட்டுமல்லாது பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் இவரை பின்பற்றுகின்றனர். இந்நிலையில், குர்மீத் ராம் மீது 2 பெண் சீடர்கள் பாலியல் புகார் அளித்தனர். இந்த வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து, அவர் ரோட்டக் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறை தண்டனை அனுபவித்து வரும் குர்மீத் ராம், அடிக்கடி பரோலில் வெளிவருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், 15-வது முறையாக அவருக்கு 40 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று சிறையிலிருந்து வெளியில் வந்த அவர், சிர்ஸாவில் உள்ள தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைமையகத்தில் தங்கியிருப்பார் என கூறப்படுகிறது.

<div class="paragraphs"><p>குர்மீத் ராம் ரஹிம் சிங்</p></div>
பிரிட்டிஷ் ஸ்குவாஷ் போட்டி: அரை இறுதியில் அனஹத் சிங்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in