ஆர்சிபி உடன் இன்று மோதல்: வெற்​றிக் கணக்கை தொடங்​கும் முனைப்​பில் சிஎஸ்கே அணி

ஆர்சிபி உடன் இன்று மோதல்: வெற்​றிக் கணக்கை தொடங்​கும் முனைப்​பில் சிஎஸ்கே அணி
Updated on
1 min read

பெங்​களூரு: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடை​பெறும் லீக் ஆட்​டத்​தில் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி), சென்னை சூப்​பர் கிங்​ஸ் ​(சிஎஸ்​கே) அணி​கள் மோதவுள்​ளன.

பெங்​களூரு சின்​ன​சாமி மைதானத்​தில் இந்​தப் போட்டி நடை​பெறவுள்​ளது. சென்னை அணிக்கு இது 3-வது லீக் போட்​டி​யாகும். முதல் 2 ஆட்​டங்​களி​லும் தோல்வி கண்ட நிலை​யில், இந்​தப் போட்​டி​யில் வெற்​றிக் கணக்​கைத் தொடங்​கும் முனைப்​பில் சிஎஸ்கே களமிறங்​கு​கிறது.

சிஎஸ்கே அணி​யின் பேட்​டிங் வரிசை நன்​றாக இருந்​த​போ​தி​லும் பந்​து​வீச்சு துறை மோச​மாக​வுள்​ளது. கலீல் அகமது, மேட் ஹென்​றி, அன்​ஷுல் காம்​போஜ், நூர் அகமது, ராகுல் சாஹர் ஆகியோரது பந்​து​வீச்சை எதிரணி வீரர்​கள் எளி​தில் அடித்து நொறுக்கி விடு​கின்​றனர். பஞ்​சாப் அணி​யுட​னான ஆட்​டத்​தில் 209 ரன்​கள் குவித்​தும் சிஎஸ்கே அணி​யால் வெற்றி பெற முடிய​வில்​லை. எனவே, இன்​றைய ஆட்​டத்​தில் வெற்றி பெறு​வதற்கு சிஎஸ்கே அணி தீவிர​மாக முயற்​சிக்​கக்​கூடும்.

அதே​நேரத்​தில் சொந்த மைதானத்​தில் ஆர்​சிபி அணி களமிறங்​கு​கிறது. முதல் போட்​டி​யில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணியை வீழ்த்​திய உற்​சாகத்​தில் அந்த அணி களம் காணவுள்​ளது. பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்​தத் படிக்​கல், ரஜத் பட்​டி​தார், ஜிதேஷ் சர்​மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்​பர்ட் என பேட்​டிங் வரிசை வலு​வாக உள்​ளது. அதே​போல் பந்​து​வீச்​சில் ஜேக்​கப் டஃப்​பி, புவனேஸ்​வர் குமார், ரொமாரியோ ஷெப்​பர்ட், அபிநந்​தன் சிங், சுயாஷ் சர்​மா, கிருணல் பாண்​டியா ஆகியோர் எதிரணி பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் தரக்​கூடும்.

ஹைத​ரா​பாத்​-லக்னோ மோதல்: முன்​ன​தாக ஹைத​ரா​பாத்​தில் பிற்​பகல் 3.30 மணிக்கு நடை​பெறும்​ ஆட்​டத்​தில்​ சன்​ரைசர்​ஸ்​ ஹைத​ரா​பாத்​, லக்​னோ சூப்​பர்​ கிங்​ஸ்​ அணிகள்​ மோதவுள்​ளன.

ஆர்சிபி உடன் இன்று மோதல்: வெற்​றிக் கணக்கை தொடங்​கும் முனைப்​பில் சிஎஸ்கே அணி
அமீரகத்துக்கு ரூ.32,000 கோடி திருப்பிச் செலுத்தும் பாகிஸ்தான்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in