“பந்​து​வீச்​சில் நாங்​கள் இன்னும் மேம்பட வேண்டும்” - ருதுராஜ் கெய்க்​வாட் பகிர்வு

ருது​ராஜ் கெய்க்​வாட்

ருது​ராஜ் கெய்க்​வாட்

Updated on
1 min read

சென்னை: எஞ்​சி​யிருக்​கும் போட்​டிகளில் நாங்​கள் பந்​து​வீச்​சில் இன்​னும் மேம்பட வேண்​டும் என்று சென்னை சூப்​பர் கிங்ஸ் அணி (சிஎஸ்​கே) கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட் தெரி​வித்​தார்.

சென்னை மைதானத்​தில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஆட்​டத்​தில் பஞ்​சாப் அணி 5 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் சிஎஸ்கே அணியை வென்​றது. தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட் கூறிய​தாவது:

சிஎஸ்கே அணி​யின் பேட்​டிங் இந்​தப் போட்​டி​யில் சிறப்​பாக இருந்​தது. ஆனால் பந்​து​வீச்சு துறை​யில் நாங்​கள் இன்​னும் மேம்பட வேண்​டும். 209 ரன்​கள் குவித்​த​போதும், பஞ்​சாப் அணி​யின் வெற்​றியை எங்​களால் தடுக்க முடிய​வில்​லை.

சில ஓவர்​களில் சிறப்​பாக பந்​து​ வீசினோம். ஆனாலும் அதை தொடர்ச்​சி​யாக செய்​ய​முடிய​வில்​லை. சிறப்​பாக பந்​து​வீசி எதிரணிக்கு அழுத்​தம் கொடுக்க முடிய​வில்​லை. எஞ்​சி​யிருக்​கும் போட்​டிகளில் நாங்​கள் பந்​து​வீச்​சில் அதிக கவனம் செலுத்​து​வோம். பஞ்​சாபுக்கு எதி​ரான ஆட்​டத்​தின்​போது ஒரு கட்​டத்​தில் ஓவருக்கு 11 ரன்​கள் எடுக்​கவேண்​டும் என்ற நிலை இருந்​தது. அடுத்த சில ஓவர்​களில் சிறப்​பாக பந்​து​வீசி அழுத்​தம் கொடுத்​திருந்​தால், பஞ்​சாப் அணிக்கு அது நெருக்​கடி​யாக இருந்​திருக்​கும். இவ்​வாறு ருது​ராஜ் கெய்க்​வாட் தெரி​வித்​தார்.

<div class="paragraphs"><p>ருது​ராஜ் கெய்க்​வாட்</p></div>
ஆர்சிபி உடன் இன்று மோதல்: வெற்​றிக் கணக்கை தொடங்​கும் முனைப்​பில் சிஎஸ்கே அணி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in