சேப்பாக்கத்தில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் சிஎஸ்கே தோல்வி: புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்

சிஎஸ்கே அணி வீரர்கள்

சிஎஸ்கே அணி வீரர்கள்

Updated on
1 min read

சென்னை: நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான தோல்வியுடன் சேர்த்து சென்னை-சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடைசியாக கடந்த 2023 சீசனில் சிஎஸ்கே சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு கேப்டன் பொறுப்பை அடுத்தவரிடம் ஒப்படைக்க தோனி முடிவு செய்தார். அங்கிருந்துதான் அணிக்கு பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன.

தோனி கடைசியாக கடந்த 2019-ல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி இருந்தார். அதன் பின்னர் ஓய்வை அறிவித்த அவர், ஐபிஎல் கிரிக்கெட்டில் சிஎஸ்கே அணிக்காக இப்போது வரை விளையாடி வருகிறார்.

மறுபக்கம் டி20 கிரிக்கெட்டின் ஆட்ட பாணி மாறி வருகிறது. நடப்பு ஐபிஎல் சீசனிலேயே 7 ஆட்டங்களில் 3-ல் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 200+ ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த அளவுக்கு டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் ஆட்டம் உள்ளது. அதை கருத்தில் கொண்டே இந்த முறை அணியை முற்றிலுமாக மாற்றி பல இளம் வீரர்களுக்கு சிஎஸ்கே வாய்ப்பு கொடுத்துள்ளது. இருப்பினும் சிஎஸ்கே பெறுகின்ற முடிவில் மாற்றம் இல்லை.

இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் என விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்துள்ளது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி உடன் சொந்த மைதானமான சென்னை - சேப்பாக்கத்தில் தோல்வி அடைந்தது. இது சேப்பாக்கத்தில் சிஎஸ்கே-வின் 6-வது தொடர் தோல்வியாக அமைந்துள்ளது. இதிலிருந்து விடுபட்டு வெற்றிக்கான சூத்திரத்தை சிஎஸ்கே அணி கண்டறிய வேண்டும் என்பது அந்த அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ‘எங்கள் அணியில் திறமை படைத்த வீரர்கள் உள்ளனர். நிச்சயம் இந்த சீசனில் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்” என சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே கடைசி இடத்தில் உள்ளது.

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே தொடர் தோல்வி: கடைசியாக கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. அதன் பின்னர் சேப்பாக்கத்தில் விளையாடிய 6 போட்டிகளிலும் சிஎஸ்கே தோல்வியை தழுவியுள்ளது.

சேப்பாக்கத்தில் சொதப்பும் சிஎஸ்கே….

  • மார்ச் 28, 2025 - சிஎஸ்கே-வை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது ஆர்சிபி

  • ஏப்.5, 2025 - 25 ரன்களில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி

  • ஏப்.11, 2025 - 8 விக்கெட்டுகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி

  • ஏப்.25, 2025 - 5 விக்கெட்டுகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி

  • ஏப்.30, 2025 - 4 விக்கெட்டுகளில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி

  • ஏப்.3, 2026 - 5 விக்கெட்டுகளில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி

<div class="paragraphs"><p>சிஎஸ்கே அணி வீரர்கள் </p></div>
209 ரன்​கள் குவித்​தும் வெற்றி பெற முடிய​வில்லை - சேப்பாக்கத்திலும் சிஎஸ்கே அணி தோல்வி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in