“மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார் சிஎஸ்கே கேப்டன்” - ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து

“மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார் சிஎஸ்கே கேப்டன்” - ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து
Updated on
1 min read

புதுடெல்லி: இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி​யின் கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட் மிகுந்த நெருக்​கடிக்கு ஆளாகி இருக்​கிறார் என்று தோன்​றுகிறது என இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீரர் ரவிச்​சந்​திரன் அஸ்வின் தெரி​வித்​தார்.

ஹைத​ரா​பாத்​தில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஐபிஎல் லீக் ஆட்​டத்​தில் ஹைத​ரா​பாத் அணி 10 ரன்​கள் வித்தியாசத்​தில் சென்னை சூப்​பர் கிங்​ஸ் ​(சிஎஸ்​கே) அணியை வீழ்த்​தி​யது.

இந்தப் போட்டி குறித்து ஜியோஹாட் ஸ்டார் சேனலுக்கு அளித்த பேட்​டி​யில் ரவிச்​சந்​திரன் அஸ்​வின் கூறிய​தாவது: சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே பேட்​டிங் செய்ய வரும்​போதே, முழங்​காலில் கட்டு போட்​டபடி வந்​தார். அது தசைப்​பிடிப்​பாக இருக்க வாய்ப்​பில்​லை.

ஆடு​களத்​தில் ஆயுஷ் மாத்ரே நொண்​டியபடியே விளையாடி​னார். உடலியக்க நிபுணர்​கள் களத்​துக்கு வந்து பரிசோதனை செய்து பார்த்​தனர். அதன் பின்​னரும், அவரை விளையாட வைத்​து, ரன் ஓடவைத்​தனர். இது பெரிய காய​மாக மாறி​னால், அவராலும் அடுத்த 6 வாரங்களுக்கு விளை​யாட முடி​யாது.

சிஎஸ்கே கேப்​டன் ருது​ராஜ் மிகுந்த நெருக்​கடி​யில் இருப்பது போல தோன்​றுகிறது. இந்​தப் போட்​டி​யின்​போது அவர் சிறப்​பாக விளை​யாட வாய்ப்பு கிடைத்​தது. ஆனால், அவசர கதியில் புல் ஷாட் விளை​யாடி அவுட்டாகி​விட்​டார். ஒரு​வேளை, களத்​தில் ருது​ராஜ் நீண்ட நேரம் நின்று விளையாடி இருந்​தால், அது ஆட்​டத்​தின் போக்கை மாற்றியிருக்​கும். இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​

“மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார் சிஎஸ்கே கேப்டன்” - ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து
“தேமுதிகவுக்கு அள்ளிக் கொடுக்க ஸ்டாலினிடம் சொன்னது நான்தான்” - திருமாவளவன் வாக்குமூலம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in