10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜார்ஜினாவை மணந்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜார்ஜினாவை மணந்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
Updated on
1 min read

லிஸ்பன்: போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் அதிகாரப்பூர்வமாகத் தம்பதியாயினர்.

போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் தொடர்பு அமைப்பான ‘பிரன்ஸ்விக் குரூப்’ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இவர்கள் நேற்று முன்தினம் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். தங்களது ஐந்து குழந்தைகளும் கலந்துகொண்ட இந்தத் திருமணம், மிகவும் தனிப்பட்ட முறையில் எளிமையாக நடைபெற்றது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனுக்கு அருகில் உள்ள கடலோர நகரமான காஸ்காய்ஸில் இந்த திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. தம்பதியினர் இருவரும் தங்களது மோதிரங்களைக் காட்டும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

மாட்ரிட் நகரில் முதன்முதலில் சந்தித்த இவர்கள், கடந்த பத்து ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். ஐந்து முறை உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்றவரும், உலகின் மிக முக்கிய விளையாட்டு நட்சத்திரங்களில் ஒருவருமான 41 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ, சமீபத்தில்தான் போர்ச்சுகல் அணிக்காகத் தனது 6-வது உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்று சாதனை படைத்திருந்தார்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜார்ஜினாவை மணந்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
“நீங்கள் இல்லாமல் என்ன செய்யப்போகிறேன்” - தந்தையின் நினைவுகளை பகிர்ந்த மெஸ்ஸி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in