

பிரதிநிதித்துவப் படம்
புதுடெல்லி: காமன்வெல்த் கோ கோ சாம்பியன்ஷிப் வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 9 முதல் 14 வரை இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக நடைபெறும் இந்தத் தொடரில் இந்தியா உள்ளிட்ட 24 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டி நடைபெறும் நகரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரை இந்தியாவில் நடத்த காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு ஒப்புதல் அளித்ததை அடுத்து, போட்டி நடைபெறும் இடத்தை இறுதி செய்ய இந்திய கோ கோ கூட்டமைப்பு பல மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
காமன்வெல்த் கோ கோ சாம்பியன்ஷிப்பில் ஆடவர் பிரிவில் 16 அணிகளும், மகளிர் பிரிவில் 16 அணிகளும் கலந்துகொள்ளும்.