‘கோலியின் எதிர்காலம் குறித்து ஏன் பேச வேண்டும்?’ - பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் ஆதங்கம்

‘கோலியின் எதிர்காலம் குறித்து ஏன் பேச வேண்டும்?’ - பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் ஆதங்கம்
Updated on
2 min read

ராஞ்சி: 2027-ம் ஆண்டு நடை​பெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்​கான இந்​திய கிரிக்​கெட் அணி​யில் சீனியர் நட்​சத்​திர பேட்​ஸ்​மேன்​களான விராட் கோலி​யும், ரோஹித் சர்​மா​வும் இடம் பெறு​வார்​களா என்​பது குறித்து சமீப​கால​மாக அதி​கம் விவா​திக்​கப்​பட்டு வரு​கிறது.

உடற்​தகு​தி, மன உறுதி மற்​றும் பார்ம் ஆகிய​வற்றை கருத்​தில் கொண்டே இவர்​கள் இரு​வரும் அணி​யில் இடம் பெறு​வது தெரிய வரும் எனவும் கூறப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில் தென் ஆப்​பிரிக்க அணிக்கு எதி​ராக நேற்று முன்​தினம் ராஞ்​சி​யில் நடைபெற்ற முதல் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி 17 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

இந்த ஆட்​டத்​தில் ரோஹித் சர்மா அரை சதம் (57) அடித்த நிலையில் விராட் கோலி அதிரடி​யாக விளை​யாடி 120 பந்​துகளில் 135 ரன்​கள் குவித்து அசத்தி​னார்.

இந்த ஆட்​டத்​துக்கு பின்​னர் நடை​பெற்ற பத்​திரி​கை​யாளர்​கள் சந்திப்​பின் போது இந்​திய கிரிக்​கெட் அணி​யின் பேட்​டிங் பயிற்​சி​யாள​ரான சிதான்ஷு கோடக் கூறிய​தாவது: இந்​திய அணி​யில் விராட் கோலி​யின் இடம், அவர் நீண்ட காலத்​துக்கு விளை​யாட முடி​யுமா என ஏன் விவா​திக்​கப்​படு​கிறது.

ஏன் இதையெல்​லாம் கருத்​தில்​கொள்ள வேண்​டும் என்று எனக்கு தெரிய​வில்​லை. அவர் மிக​வும் சிறப்​பாக பேட்​டிங் செய்​கிறார். அவரது எதிர்​காலத்​தைப் பற்றி நாம் ஏன் பேச வேண்​டும்? அவர் செயல்​படும் விதம், அவரது உடற்​தகுதி என எதை பற்​றி​யும் எந்த கேள்​வி​யும் இல்​லை.

விராட் கோலி மிக​வும் புத்​தி​சாலி​யான வீரர். அவர் இதே​போன்று பேட்​டிங் செய்​யும் வரை, வேறு எதை பற்​றி​யும் பேசுவ​தில் அர்த்​தமில்​லை. 2027ம் ஆண்டு உலகக் கோப்​பையை பற்றி வீரர்​களோ, அணி நிர்​வாகமோ இது​வரை சிந்​திக்​க​வில்​லை. சீனியர் வீரர்​கள் குறித்து எந்த விவாதங்​களும் நிகழ​வில்​லை. ரோஹித் சர்​மா​வும், விராட் கோலி​யும் சிறப்​பாக செயல்​பட்டு வரு​கிறார்​கள். அணிக்​காக பங்​களித்து வரு​கின்​றனர்.

‘கோலியின் எதிர்காலம் குறித்து ஏன் பேச வேண்டும்?’ - பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் ஆதங்கம்
‘திரெளபதி 2’ விவகாரம்: மன்னிப்புக் கேட்ட சின்மயி - பின்னணி என்ன?

முதல் ஒரு​நாள் போட்​டி​யில் விராட் கோலி​யின் சதம் அபாரமானது. பொறுப்பை ஏற்​றுக்​கொண்டு சிறப்​பாக பேட்​டிங் செய்​தார். அவர், ஏன் இவ்​வளவு விதி​விலக்​கான வீரர் என்​பதை மீண்டும் காட்​டி​னார். ரோஹித் சர்​மா​வும் விராட் கோலி​யும் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்​கள். அவர்​கள் பேட்​டிங் செய்​யும் விதம், அவர்​கள் உரு​வாக்​கும் பார்ட்​னர்​ஷிப்​கள் மிகப்​பெரிய வித்தி​யாசத்தை ஏற்​படுத்​துகின்றன. அவர்​கள் தங்​கள் அனுபவத்தை இளம் வீரர்​களு​டன் பகிர்ந்து கொள்​கிறார்​கள். இது அணிக்கு பெரிய அளவி​லான சாதக​மான விஷ​யம்.

2-வது பேட்​டிங்​கின் போது பனிப்​பொழிவு அதி​கம் இருந்தது. இதனால் பந்​து​ வீச்​சாளர்​களால் கைகளில் பந்தை இறுக பிடிக்க முடிய​வில்​லை. பந்​துகள் நழுவி மட்​டைக்கு நேராக சென்​றன. தொடக்​கத்​திலேயே விக்​கெட்​கள் வீழ்த்​திய ஹர்​ஷித் ராணாவை பாராட்ட வேண்​டும். பந்​துகளின் நகர்​வுக்கு தகுந்​த​படி சரி​யான திசை​யில் வீசி​னார். கூகபுரா பந்​துகளில் 2 முதல் 5 ஓவர்​கள் வரை​தான் ஸ்விங் ஆகும். அதை ஹர்​ஷித் ராணா சரி​யாக பயன்படுத்தினார்​. இவ்​வாறு சிதான்​ஷு கோடக்​ கூறினார்.

‘கோலியின் எதிர்காலம் குறித்து ஏன் பேச வேண்டும்?’ - பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் ஆதங்கம்
பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: டிச.8-ல் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in