பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: டிச.8-ல் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடக்கம்

பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: டிச.8-ல் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடக்கம்
Updated on
1 min read

சென்னை: சிம்புவுக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, டிசம்பர் 8-ம் தேதி ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குகிறது.

நவம்பர் மாதத்தில் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால், வேல்ஸ் நிறுவனத்துக்கு சிம்புவின் தேதிகள் எப்போது என்பது தெரியாமல் படம் தொடங்க முடியாத சூழல் உருவானது. இதனால் சிம்பு – வேல்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதில் வேல்ஸ் நிறுவனத்துக்கு எப்போது தேதிகள் என்பதை சிம்பு தெரிவிக்க வேண்டும் அல்லது அஸ்வத் மாரிமுத்து படத்துக்கு முன்னதாக வேல்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய அட்வான்ஸ் தொகையினை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று சிம்புவிடம் கூறப்பட்டுள்ளது.

இதனால் வேல்ஸ் நிறுவனத்தின் சார்பில் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளன. டிசம்பர் 8-ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.

வெற்றிமாறன் இயக்கவுள்ள ‘அரசன்’ படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா நடிப்பது உறுதியாகி இருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை தாணு தயாரிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க வேண்டும் என்று தொடங்கப்படுகிறது.

பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: டிச.8-ல் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடக்கம்
‘தொடர் வெற்றி நாயகனாக 50 ஆண்டுகள்!’ - ரஜினிக்கு சீமான் வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in