சென்னை ஸ்குவாஷ் போட்டி: அரை இறுதியில் ஜோஷ்னா

சென்னை ஸ்குவாஷ் போட்டி: அரை இறுதியில் ஜோஷ்னா
Updated on
1 min read

சென்னை: ஹெச்சிஎல் ஸ்குவாஷ் இந்தியன் டூர் 4 போட்டி சென்னையில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியில் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 6-11, 11-7, 5-11, 11-6, 11-7 என்ற செட் கணக்கில் எகிப்தின் நார்டின் கராஸை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு கால் இறுதியில் இந்தியாவின் தன்வி கன்னா 7-11, 12-10, 14-12, 7-11, 11-4 என்ற செட் கணக்கில் ஹாங் காங்கின் சிங் செங்கை வீழ்த்தினார். தேசிய சாம்பியனான அனஹத் சிங் 11-2, 11-2, 11-8 என்ற செட் கணக்கில் ஜப்பானின் அகாரி மிடோரிகாவாவை தோற்கடித்தார்.

அனஹத் சிங் அரை இறுதி சுற்றில் தென் ஆப்பிரிக்காவின் ஹேலி வார்டுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். ஆடவருக்கான கால் இறுதி சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் 11-9, 11-3,11-5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜோசப் ஒயிட்டை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.

சென்னை ஸ்குவாஷ் போட்டி: அரை இறுதியில் ஜோஷ்னா
இந்திய அணிக்கு பதிலடி கொடுத்த தென் ஆப்​பிரிக்கா: 2-வது ஒருநாள் போட்டி ஹைலைட்ஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in