

ரோம்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் இத்தாலியின் ரோம் நகரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் - ரோமா அணிகள் மோதின.
இதில் ரியல் மாட்ரிட் அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரரான கிலியன் எம்பாப்பே 25-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.
இந்த போட்டி 27 வயதான எம்பாப்பேவுக்கு சாம்பியன்ஸ் லீக் தொடரில் 100-வது ஆட்டமாக அமைந்தது. இதன் மூலம் குறைந்த வயதில் 100 போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இதற்கு முன்னர் சாம்பியன்ஸ் லீக் தொடரில் லயோனல் மெஸ்ஸி கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பரில் தனது 28 வயதில் 100 போட்டிகளில் விளையாடியதே சாதனையாக இருந்தது. இதை தற்போது எம்பாப்பே முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.