உலகக் கோப்பை செஸ் தொடர்: கார்ல்சென் மீண்டும் சாம்பியன்

உலகக் கோப்பை செஸ் தொடர்: கார்ல்சென் மீண்டும் சாம்பியன்
Updated on
1 min read

பாரிஸ்: இஸ்​போர்ட்ஸ் செஸ் உலகக் கோப்பை போட்​டி​யில் முன்​னாள் உலக சாம்​பியனும், நார்வே வீரரு​மான மாக்​னஸ் கார்ல்சென் 2-வது முறை​யாக கோப்​பையை வென்​றார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இப்​போட்​டிகள் நடை​பெற்​றன. நேற்று நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் மாக்​னஸ் கார்ல்​செனும், பெலாரஸ் கிராண்ட்​மாஸ்​டர் டெனிஸ் லசாவிக்​கும் மோதினர்.

முதல் செட்​டில் கார்ல்​சென் 3-1 என்ற கணக்​கிலும், 2-வது செட்​டில் 3-1 என்ற கணக்​கிலும் லசாவிக்கை வீழ்த்தி 2-0 என்ற கணக்​கில் கோப்​பையைக் கைப்​பற்​றி​னார்.

கடந்த ஆண்​டும் இந்த இஸ்​போர்ட்ஸ் உலகக் கோப்​பையை கார்ல்​சென் கைப்​பற்​றி​யிருந்​தார். இதையடுத்து தொடர்ச்​சி​யாக 2 முறை இந்த கோப்​பையை கைப்​பற்​றிய பெருமை அவருக்​குக்​ கிடைத்​துள்​ளது.

உலகக் கோப்பை செஸ் தொடர்: கார்ல்சென் மீண்டும் சாம்பியன்
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை நடந்த இடத்தில் சிபிஐ ஆய்வு: முதல்கட்ட விசாரணை தீவிரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in