பும்ரா Vs சூரியவன்ஷி: ராஜஸ்தான் - மும்பை இந்தியன்ஸ் போட்டியின் சுவாரஸ்யம்!

பும்ரா Vs சூரியவன்ஷி: ராஜஸ்தான் - மும்பை இந்தியன்ஸ் போட்டியின் சுவாரஸ்யம்!
Updated on
1 min read

ஐபிஎல் 2026 தொடரின் 13-வது போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி தன்னளவிலேயே விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் குறிப்பாக ஜஸ்பிரித் பும்ராவை இளம் அதிரடிப் புயல் வைபவ் சூரியவன்ஷி எப்படி ஆடுவார் என்ற எதிர்பார்ப்பில் தற்போது சூடுபிடித்துள்ளது.

2025 ஐபிஎல் தொடரின் 50-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர்கொண்ட போது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக வைபவ் சூரியவன்ஷி தன் அறிமுகப் போட்டியிலேயே 35 பந்துகளில் சதம் கண்டது பெரும் வைரலானதில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக பும்ரா, ட்ரெண்ட் போல்ட், ஆகியோரை எப்படி துவம்சம் செய்வார் என்ற எதிர்பார்ப்பு அப்போதும் ஏற்பட்டது, ஆனால் அப்போது முதல் ஓவரில் தீபக் சாஹர் வீசிய பந்தில் மிட் ஆனில் கேட்ச் கொடுத்து 2 பந்துகளில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

217 ரன்களை விரட்டும் போது ராஜஸ்தான் 117 ரன்களுக்குக் காலியானது. ஆனால் இந்தப் போட்டிக்குப் பிறகே வைபவ் சூரியவன்ஷி ஏகப்பட்ட வெள்ளைப்பந்து சாதனைகளை உடைத்து நொறுக்கிக் கொண்டிருக்கிறார். வெளிநாட்டு பவுலர்கள் அஞ்சுவது ஒரு புறம் இருக்க நம் உள்நாட்டு பவுலர்களே வைபவ் சூரியவன்ஷி எப்படி அடித்து நொறுக்கப் போகிறாரோ என்ற அச்சத்தில் உத்திகளை வகுத்து வருகின்றனர்.

ஏற்கெனவே இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவை புரட்டி எடுத்து 17 பந்து 52 என்றும் பிறகு 18 பந்து 31 என்று பொங்கி எழ காத்திருக்கிறார் சூரியவன்ஷி. தொழில்பூர்வ கிரிக்கெட்டில் இதுவரை பும்ரா பந்து வீச்சை வைபவ் சூரியவன்ஷி எதிர்கொண்டதில்லை. சூரியவன்ஷி இந்த முறை பும்ராவை நிச்சயம் எதிர்கொள்வார், சூரியவன்ஷியே இதை எதிர்நோக்கிக் காத்திருப்பார் என்று நம்பலாம்.

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக 210 ரன்களைக் கஷ்டப்பட்டு காப்பாற்றி துஷார் தேஷ்பாண்டேயினால் வென்றது ராஜஸ்தான் அன்று. ஆகவே அதே அணியை தொடர ரியான் பராக் விரும்புவார். டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரக உடல் நலக்குறைவால் ஆடாத ஹர்திக் பாண்டியா இந்தப் போட்டிக்குத் திரும்புகிறார்.

குவஹாட்டி பிட்ச் கடந்த போட்டியில் சிஎஸ்கேவுக்கு எதிராக வேக பவுலிங்குக்குச் சாதகமாக இருந்தது. சிஎஸ்கே 127 ரன்களுக்குச் சுருண்டது. ராஜஸ்தான் எளிதில் வென்றது. மேலும் மும்பை இந்தியன்ஸ் இந்த குவஹாட்டி பார்ஸபாரா ஸ்டேடியத்தில் முதன் முதலாக ஆடுகிறது. அன்றைய தினம் போல் இன்றும் பிட்ச் நீண்ட நேரம் கவர் செய்யப்பட்டுள்ளதால் ஈரப்பதம் உண்டாகி முதலில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கலாம்.

பும்ரா Vs சூரியவன்ஷி: ராஜஸ்தான் - மும்பை இந்தியன்ஸ் போட்டியின் சுவாரஸ்யம்!
“ஐசிசி தொடர்களில் அடுத்தடுத்து இரண்டு தோல்வி வேதனை அளிக்கிறது” - ரச்சின் ரவீந்திரா வருத்தம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in