“பும்ரா எனும் ஜீனி” - ஃபாப் டு பிளெஸ்ஸி புகழாரம் | T20 WC 2026

பும்ரா, ஃபாப் டு பிளெஸ்ஸி

பும்ரா, ஃபாப் டு பிளெஸ்ஸி

Updated on
1 min read

மும்பை: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறி உள்ளது. இந்நிலையில், பும்ராவை ஜீனி உடன் ஒப்பிட்டு தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஃபாப் டு பிளெஸ்ஸி பேசியுள்ளார்.

இங்கிலாந்து அணி உடனான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர் பும்ரா. அவரது பந்து வீச்சு இங்கிலாந்து அணிக்கு நெருக்கடியாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் அவர் வீசிய கடைசி ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். அதற்கு முன்பு வரையில் ஒவ்வொரு ஓவரிலும் ஏதேனும் ஒரு பந்தை பவுண்டரிக்கு விளாசி கொண்டிருந்தனர் இங்கிலாந்து வீரர்கள். அந்த நிலையில்தான் 18-வது ஓவரில் வெறும் 6 ரன்களை பும்ரா கொடுத்திருந்தார்.

“பும்ரா மாதிரியான ஒரு வீரரை தங்கள் அணியில் கொண்டிருப்பதற்கு இந்திய கிரிக்கெட் அணி எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதை அவர்களே இன்னும் அறியவில்லை. இந்தவொரு ஃபார்மெட்தான் என்று இல்லாமல் மீண்டும், மீண்டும் தனது திறனை பும்ரா நிரூபித்து வருகிறார். அவரிடம் பந்தை கொடுத்தால் போதும், ஆட்டத்தை வென்று கொடுப்பார்.

எந்தவொரு அணியின் கேப்டனும் கனவில் காணும் அபூர்வ சக்தியை அவர் தருகிறார். அது எப்படியென்றால் ஒரு ஜீனியை போல என்று சொல்லலாம். மாய விளக்கை தேய்த்தால் பும்ரா எனும் ஜீனி வெளிவந்து, ஆட்டத்தை முடித்துக் கொடுப்பார். அவரது பவுலிங் ஆக்‌ஷன் தனித்துவமானது” என்று ஃபாப் டு பிளெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>பும்ரா,&nbsp;ஃபாப் டு பிளெஸ்ஸி</p></div>
“எங்கள் வீரர்களை எண்ணி பெருமை கொள்கிறேன்” - இங்கிலாந்து கேப்டன் ப்ரூக் | T20 WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in