

அனஹத் சிங்
பர்மிங்ஹாம்: பிரிட்டனில் நடைபெற்று வரும் பிரிட்டிஷ் ஜூனியர் ஸ்குவாஷ் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் பிரிவு ஒற்றையர் அரை இறுதிக்கு இந்திய வீராங்கனை அனஹத் சிங் முன்னேறியுள்ளார்.
பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் அனஹத் சிங் 11-4, 10-12, 11-9, 11-3 என்ற புள்ளிகள் கணக்கில் எகிப்து வீராங்கனை பார்ப் சமேவை வீழ்த்தினார்.