

புதுடெல்லி: பிரிட்டிஷ் ஓபன் ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை அனஹத் சிங் முன்னேறியுள்ளார்.
பிரிட்டனின் பர்மிங்ஹாமில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் அனஹத் சிங் 11-8, 11-7, 11-9 என்ற கணக்கில் எகிப்து வீராங்கனை மல்லிகா எல் கராக்சியை வீழ்த்தினார்.
இறுதிச் சுற்றில் அவர் பிரான்ஸ் வீராங்கனை லாரன் பல்தயானைச் சந்திக்கவுள்ளார். ஆடவர் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு அரை இறுதிச் சுற்றில் இந்திய வீரர் ஆர்யவீர் தேவன் 9-11, 5-11, 7-11 என்ற கணக்கில் எகிப்து வீரர் பிலோபடேர் சலேவிடம் தோல்வி கண்டார்.