சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பிரேசிலின் லாரா 9 விக்​கெட்​ வீழ்த்தி சாதனை

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பிரேசிலின் லாரா 9 விக்​கெட்​ வீழ்த்தி சாதனை
Updated on
1 min read

துபாய்: போட்​ஸ்​வானா நாட்​டில் பிசிஏ கலாஹாரி மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று கபோரோனில் உள்ள போட்​ஸ்​வானா கிரிக்கெட் சங்​கத்​தின் ஓவல் 2 மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் லெசோதோ - பிரேசில் அணி​கள் மோதின.

இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த பிரேசில் 202 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக மோனிகே மச்​சாடோ 69, ரோபர்டா ஏவரி 48 ரன்​கள் விளாசினர். 203 ரன்​கள் இலக்குடன் பேட் செய்த லெசோதா அணி 6.2 ஓவர்​களில் 13 ரன்​களுக்கு சுருண்​டது. இதனால் பிரேசில் அணி 189 ரன்கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

அந்த அணி தரப்​பில் வேகப்​பந்து வீச்சு வீராங்​க​னை​யான லாரா கார்​டோசோ 3 ஓவர்​களை வீசி 4 ரன்​களை மட்​டும் விட்​டுக்​கொடுத்து 9 விக்​கெட்​களை வீழ்​ததி சாதனை படைத்​தார். இதன் மூலம் சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் வரலாற்றில் மகளிர், ஆடவர் ஆகிய இரு பிரி​விலும் ஒரே இன்​னிங்​ஸில் 9 விக்​கெட்​டு​களைக் கைப்​பற்​றிய முதல் நபர் என்ற வரலாற்​றுச் சாதனை படைத்​துள்​ளார் லாரா கார்​டோசோ.

இதற்கு முன்​னர் ஆடவர் சர்​வ​தேச டி20 கிரிக்​கெட்​டில் கடந்த ஆண்டு மியான்​மர் அணிக்கு எதி​ராக பூடான் அணியின் சோனம் யேஸ்ஹே 7 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 8 விக்​கெட்​களை கைப்​பற்​றியதே சாதனை​யாக இருந்​தது. அதேவேளை​யில் மகளிர் டி 20 கிரிக்​கெட்​டில் கடந்த 2024-ம் ஆண்டு மங்​கோலியா அணிக்கு எதி​ராக இந்தோ​னேஷி​யா​வின் ரோமாலியா ரோமாலியா ரன்​கள் ஏதும் விட்​டுக்​கொடுக்​காமல் 7 விக்​கெட்​கள் கைப்பற்றியதே சாதனை​யாக இருந்​தது.

இந்த இரு சாதனை​களை​யும் தற்​போது தகர்த்து புதிய சாதனையை படைத்​துள்​ளார் லாரா கார்​டோசோ. லெசோதா அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 2-வது ஓவரை வீசிய லாரா கார்​டோசோ ஹாட்​ரிக் விக்​கெட் வீழ்த்​தி​னார்.

தொடர்ந்து 4-வது ஓவரை வீசிய அவர், மேற்​கொண்டு 4 விக்​கெட்​களை சாய்த்​தார். இதைத் தொடர்ந்து 6-வது வீசிய லாரா கார்​டோசோ இந்த ஓவரில் 2 விக்​கெட்​களை வீழ்த்தினார். கடைசி விக்​கெட்​டை மரியேன்​ ஆர்​தர் கைப்பற்றினார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பிரேசிலின் லாரா 9 விக்​கெட்​ வீழ்த்தி சாதனை
மன்னார்குடி தொகுதி மக்களின் மனம் கவரப் போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in