

பாட்னா: பிஹாரில் இளைஞர் நலன், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, உயர் கல்வி மற்றும் விமான போக்குவரத்து ஆகிய 3 புதிய துறைகளை உருவாக்க கடந்த 9-ம் தேதி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதுதவிர ஏற்கெனவே இருந்த 3 துறைகளின் பெயரை மாற்றவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இந்நிலையில் பிஹார் அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் நிதிஷ் குமாருக்கு விமான போக்குவரத்துத் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுபோல தொழிலாளர் நலன் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சஞ்சய் சிங் டைகருக்கு கூடுதலாக இளைஞர் நலன், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு துறையும் கல்வி அமைச்சர் சுனில் குமாருக்கு உயர் கல்வித் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.