தரம்​சாலா​வில் 3-வது சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்டி: இந்​தியா - தென் ஆப்​பிரிக்க அணிகள் இன்று பலப்​பரீட்சை

இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ்.

இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ்.

Updated on
2 min read

தரம்​சாலா: இந்​தி​யா, தென் ஆப்​பிரிக்க அணி​களுக்கு இடையி​லான 3-வது சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்டி இன்று தரம்​சாலா​வில் நடை​பெறவுள்​ளது.

தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து டெஸ்ட், ஒரு​நாள், டி20 தொடர்​களில் விளை​யாடி வரு​கிறது. டெஸ்ட் தொடரை தென் ஆப்​பிரிக்கா​வும், ஒரு​நாள் தொடரை இந்​தி​யா​வும் கைப்​பற்​றின. இதைத் தொடர்ந்து 5 போட்​டிகள் கொண்ட டி20 தொடர் நடை​பெற்று வரு​கிறது.

முதல் போட்​டி​யில் இந்​தியா 101 ரன்​கள் வித்​தி​யாசத்​தி​லும், 2-வது போட்​டி​யில் தென் ஆப்​பிரிக்கா 51 ரன்​கள் வித்​தி​யாசத்தி​லும் வெற்றி பெற்​றது. இதையடுத்து தொடர் 1-1 என்ற கணக்​கில் சமநிலை​யில் உள்​ளது.

இந்​நிலை​யில் 3-வது சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்டி இமாச்சல பிரதேச மாநிலம் தரம்​சாலா​விலுள்ள இமாச்​சல் பிரதேச கிரிக்​கெட் சங்க மைதானத்​தில் இன்று இரவு 7 மணிக்கு நடை​பெறவுள்​ளது.

முதல் போட்​டி​யில் சிறப்​பாக விளை​யாடிய இந்​திய அணி வீரர்​கள் 2-வது போட்​டி​யில் பந்​து​வீச்​சிலும், பேட்​டிங்​கிலும் கோட்டை விட்​டனர். அபிஷேக் சர்மா அதிரடி​யாக விளை​யாடி​னாலும் நீண்ட நேரம் களத்​தில் அவரால் நிலைக்க முடிய​வில்​லை. அவர் 17 ரன்​களில் திரும்​பி​னார். எனவே, இன்​றைய ஆட்​டத்​தில் அவர் பொறுப்​புடன் நீண்ட இன்​னிங்ஸ் விளை​யாடி ரன்​கள் குவிப்​பார் என எதிர்​பார்க்​கலாம்.

அதே​போல் ஷுப்​மன் கில், கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் ஆகியோரின் பேட்​டிங் ஃபார்ம் கவலை அளிக்​கக்​கூடிய​தாக இருக்​கிறது. முதல் போட்​டி​யில் 4 ரன்​கள் எடுத்த கில், 2-வது போட்​டி​யின் முதல் பந்​திலேயே டக்​-அவுட்​டா​னார். எனவே, அவர் இன்​றைய போட்​டி​யில் உயர்​மட்​டத் திறனை வெளிப்​படுத்​துவார் என எதிர்​பார்க்​கலாம்.

கேப்​டன் சூர்​யகு​மார் யாத​வும், தனது பேட்​டிங் திறமையை நிரூபிக்க வேண்​டிய கட்​டா​யத்​தில் இருக்​கிறார். திலக் வர்மா 62 ரன்​கள் குவித்​த​தால் மட்​டுமே இந்​திய அணி 2-வது போட்​டி​யில் கவுர​வ​மான ஸ்கோரை எட்ட முடிந்​தது. திலக் வர்​மா, ஹர்​திக் பாண்​டி​யா, ஜிதேஷ் சர்​மா, சிவம் துபே ஆகியோரிட​மிருந்து இன்று சிறப்​பான மட்டை வீச்சு வெளிப்​படும் என ரசிகர்​கள் காத்​திருக்​கின்​றனர்.

2-வது போட்​டி​யில் பவுலிங்​கிலும் நமது வீரர்​கள் மோச​மான செயல்​திறனை வெளிப்​படுத்​தினர். பும்​ரா, அர்​ஷ்தீப் சிங், ஹர்​திக் பாண்​டியா ஆகியோரின் பந்​து​வீச்சு எடு​பட​வில்​லை. அர்​ஷ்தீப் சிங் ஒரே ஓவரில் 7 வைட் பந்​துகளை வீசி ரசிகர்​களை அதிர்ச்​சிக்​குள்​ளாக்​கி​னார். வருண் சக்​ர​வர்த்​தி, அக்​சர் படேல் ஆகியோர் மட்​டுமே சிறப்​பான பந்​து​வீச்சை வெளிப்​படுத்​தினர்.

எனவே, இன்​றைய ஆட்​டத்​தில் தென் ஆப்​பிரிக்க பேட்​ஸ்​மேன்​களுக்கு அதிக அழுத்​தத்​தைக் கொடுக்​கும் வகை​யில் இந்​திய வீரர்​களின் பந்​து​வீச்சு இருக்​கவேண்​டும் என்று ரசிகர்​கள் எதிர்​பார்க்​கின்​றனர்.

தென் ஆப்​பிரிக்க அணி​யைப் பொருத்​தவரை​யில் அந்த அணி​யின் தொடக்க வீரர் குயிண்​டன் டி காக் அபார​மாக விளை​யாடி வரு​கிறார். எனவே, அவரிட​மிருந்து மேலும் ஓர் அபார​மான இன்​னிங்ஸ் வெளிப்​படலாம்.

எய்​டன் மார்க்​ரம், டெவால்ட் பிரே​விஸ், டோனவன் பெரே​ரா, டேவிட் மில்​லர், மார்கோ யான்​சன் ஆகியோ​ரும் தங்​களது அதிரடியை வெளிப்​படுத்த காத்​திருக்​கின்​றனர்​.

அதே​போல பந்​து​வீச்​சிலும்​ லுங்​கி நிகிடி, மார்​கோ யான்​சன்​ லுத்​தோ சிபம்​லா, டோனவன்​ பெரே​ரா, ஓட்​நீல்​ பார்ட்​மென்​, ஜார்​ஜ் லிண்​டே ஆகியோ​ரும்​ இந்​தி​ய அணி பேட்​ஸ்​மேன்​களை அச்​சுறுத்​தக்​ ​காத்​திருக்​கின்​றனர்​.

நேரம்​: இரவு 7 மணி. நேரலை: ஸ்​டார்​ ஸ்​போர்​ட்ஸ்.

<div class="paragraphs"><p>இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ். </p></div>
கொல்​கத்தா சால்ட் லேக் மைதானத்​தில் மெஸ்​ஸியை காண முடி​யாத​தால் ரசிகர்​கள் ரகளை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in