சர்வதேச கால்பந்தில் இருந்து பெல்ஜியம் வீரர் லுகாகு ஓய்வு

ரொமேலு லுகாகு

ரொமேலு லுகாகு

Updated on: 
1 min read

சென்னை: சர்வதேச கால்பந்தில் இருந்து பெல்ஜியம் வீரர் ரொமேலு லுகாகு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

33 வயதான அவர், பெல்ஜியம் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர். முன்கள வீரர். பெல்ஜியம் அணிக்காக 135 ஆட்டங்களில் 94 கோல்களை பதிவு செய்துள்ளார்.

பெல்ஜியம் அணிக்காக அதிக கோல் பதிவு செய்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் ஆடவர் கால்பந்தில் அதிக கோல்கள் பதிவு செய்த வீரர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார். கடந்த 2018 உலகக் கோப்பை தொடரை மூன்றாவது இடத்தில் நிறைவு செய்தது பெல்ஜியம் அணி. அதில் லுகாகு முக்கிய பங்காற்றினார். இந்நிலையில், அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

“இந்த 16 ஆண்டு காலத்தில் தேசிய அணிக்காக என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்துள்ளேன். அற்புதமான வீரர்களுடன் இணைந்து விளையாடி உள்ளேன். அதை எண்ணி பெருமை கொள்கிறேன். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என் மீது நம்பிக்கை வைத்து அணிக்கு உதவும் வாய்ப்பை வழங்கிய பயிற்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சிறந்த பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் நான் அனுபவித்தேன். அதை என்னால் என்றென்றும் மறக்க முடியாது. அனைவருக்கும் நன்றி” என்று லுகாகு தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>ரொமேலு லுகாகு</p></div>
“பிரதமர் மோடியை இத்தாலி அரசியல் பிரமுகர் விமர்சித்ததை ஏற்க முடியாது” - சத்திஸ்கர் துணை முதல்வர்

X