பிசிசிஐ சார்பில் ஷுப்மன் கில்லுக்கு விருது; வாழ்நாள் சாதனையாளர் கவுரவத்தை பெறுகிறார் திராவிட்!

பிசிசிஐ சார்பில் ஷுப்மன் கில்லுக்கு விருது; வாழ்நாள் சாதனையாளர் கவுரவத்தை பெறுகிறார் திராவிட்!
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம் (பிசிசிஐ) சார்​பில் வரு​டாந்​திர விருது வழங்​கும் விழா​வில் வரும் 15-ம் தேதி டெல்​லி​யில் நடை​பெறுகிறது. இதில் “ஆண்​டின் சிறந்த கிரிக்​கெட் வீரர்” விருதை இந்​திய அணியின் டெஸ்ட் மற்​றும் ஒரு​நாள் கிரிக்கெட் அணி​யின் கேப்டன் ஷுப்​மன் கில் பெறவுள்​ளார்.

26 வயதான ஷுப்​மன் கில், கடந்த வாரம் இந்​திய அணி சாம்​பியன் பட்​டம் வென்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்​யப்​பட​வில்​லை. ஆனால் டெஸ்ட், ஒரு​நாள் போட்டி போட்டிகளில் அவர், மிகச் சிறப்​பாக விளை​யாடி இருந்​தார்.

ஷுப்​மன் டெஸ்ட் அரங்​கில் 983 ரன்​களைக் குவித்​துள்​ளார். குறிப்​பாக 2025-ல் இங்​கிலாந்​துக்கு எதி​ரான வெளி​நாட்​டுத் தொடரில் 70-க்​கும் அதி​க​மான சராசரி​யுடன் 754 ரன்​கள் எடுத்து அசத்​தி​னார். ஒரு​நாள் போட்​டிகளில் மொத்​தம் 490 ரன்​கள் எடுத்​துள்​ளார். இதில், இந்​தியா ஐசிசி சாம்​பியன்ஸ் டிராபியை வென்ற தொடரில் எடுத்த 188 ரன்​களும் அடங்கும்.

அனைத்து வடிவி​லான கிரிக்​கெட் போட்​டிகளை​யும் சேர்த்து 49 சராசரி​யுடன் 1,764 ரன்​களை அவர், குவித்துள்ளார். இதில் 7 சதங்​கள் மற்​றும் 3 அரைசதங்​கள் அடங்​கும். சர்​வ​தேச டி20 போட்​டிகளில் பெரிய தாக்​கம் ஏற்​படுத்​தா​விட்​டாலும், ஐபிஎல் தொடரில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணிக்​காக 50 சராசரி​யுடன் 650 ரன்​களை விளாசி​னார்.

15-ம் தேதி நடை​பெறும் விழா​வில், இந்​திய அணி​யின் முன்னாள் தலைமை பயிற்​சி​யாளர் ராகுல் திரா​விட், இந்திய கிரிக்​கெட்​டுக்கு அவர் ஆற்​றிய மகத்​தான பங்களிப்​பிற்​காக (2024 டி20 உலகக் கோப்பை வெற்​றி) கர்னல் சி.கே. நாயுடு வாழ்​நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்​கப்பட உள்​ளார். உள்​ளூர் கிரிக்​கெட்​டில் சிறப்​பாகச் செயல்​பட்​டதற்​காக மும்பை கிரிக்​கெட் சங்​கம் சிறந்த சங்​க​மாகத்​ தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளது.

பிசிசிஐ சார்பில் ஷுப்மன் கில்லுக்கு விருது; வாழ்நாள் சாதனையாளர் கவுரவத்தை பெறுகிறார் திராவிட்!
ஈரானின் ‘ஆயில்’ ஆயுதம்... போரில் ட்ரம்ப்புக்கு சேதாரமா? - ஒரு நிலவரப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in