நியூஸி.க்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்றியது வங்கதேசம்

நியூஸி.க்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்றியது வங்கதேசம்
Updated on
1 min read

சட்டோகிராம்: வங்கதேசம் - நியூஸிலாந்து அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் போட்டி சட்டோகி​ராமில் நேற்று நடை​பெற்​றது.

முதலில் பேட் செய்த வங்​கதேச அணி 50 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 265 ரன்​கள் எடுத்​தது. நஜ்​முல் ஹோசைன் ஷான்டோ 119 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 9 பவுண்​டரி​களு​டன் 105 ரன்​கள் விளாசி​னார். லிட்​டன் தாஸ் 91 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 3 பவுண்​டரி​களு​டன் 76 ரன்​கள் சேர்த்​தார். நியூஸிலாந்து அணி தரப்​பில் வில் ரூர்க் 3 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார்.

பென் லிஸ்​டர், ஜெய்​டன் லெனாக்ஸ் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர். 266 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 44.5 ஓவர்​களில் 210 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக டீன் பான்ஃகி​ராப்ட் 75, நிக் கெல்லி 59 ரன்​கள் சேர்த்​தனர். வங்​கதேச அணி தரப்​பில் முஸ்​டாபிஸுர் ரஹ்​மான் 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். நஹித் ராணா, மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர்.

55 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற வங்​கதேச அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரை 2-1 என கைப்​பற்றி கோப்​பையை வென்​றது. முதல் ஒரு​நாள் போட்​டி​யில் நியூஸிலாந்து அணி 26 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. 2-வது ஒரு​நாள் போட்​டி​யில் வங்​கதேச அணி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்​திருந்​தது.

நியூஸி.க்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்றியது வங்கதேசம்
டெல்லி அணியில் இணைகிறார் ஸ்டார்க்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in