

சில்ஹெட்: வங்கதேசம், மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சில்ஹெட் நகரில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் 356 ரன்களும், வங்கதேசம் 388 ரன்களும் குவித்தன.
2-வது இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 398 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கடைசி நாளில் வங்கதேச அணி 2- வது இன்னிங்ஸை விளையாடியது.
அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து, மேற்கு இந்தியத் தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.