உலகக் கோப்பை போட்டிகளை இலங்கைக்கு மாற்ற ஐசிசிக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை

ஐபிஎல் அணியில் முஸ்டாபிஸுர் நீக்கப்பட்ட விவகாரம் தாக்கம்
உலகக் கோப்பை போட்டிகளை இலங்கைக்கு மாற்ற ஐசிசிக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை
Updated on
1 min read

டாக்கா: கொல்கத்தா நைட் ரைடர்​ஸ்​ (கேகேஆர்) ஐபிஎல் அணியி​லிருந்து முஸ்​டாபிஸுர் நீக்​கப்​பட்​டதைத் தொடர்ந்​து, ஐசிசி உலகக் கோப்பை போட்​டி​யில் வங்​கதேசம் பங்​கேற்​கும் போட்​டிகளை இந்​தி​யா​விலிருந்து இலங்​கைக்கு மாற்​ற வேண்​டும் என்று வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யம் ​(பிசிபி) கோரிக்கை விடுத்துள்ளது.

வங்​கதேசத்​தில் இந்​துக்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்டு வருவதால் கொல்​கத்தா அணி​யில் இடம்​பெற்​றிருந்த முஸ்டாபிஸுரை நீக்​கவேண்​டும் என்று பாஜக, சிவசே​னா, இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்​தனர். இவரை கடந்த மாதம் நடந்த ஐபிஎல் மினி ஏலத்​தில் ரூ.9.20 கோடிக்கு கேகேஆர் நிர்​வாகம் எடுத்​திருந்​தது. இதையடுத்து பிசிசிஐ உத்​தர​வின் பேரில் முஸ்​டாபிஸுரை கேகேஆர் அணி நிர்​வாகம் விடு​வித்​து​விட்​டது.

இதற்கு வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யம் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளது. இதையடுத்​து, அடுத்த மாதம் இந்​தி​யா, இலங்​கை​யில் நடை​பெறவுள்ள ஐசிசி டி20 உலகக்​கோப்பை தொடரில் பங்​கேற்க இந்​தி​யா​வுக்கு வங்​கதேச அணி வராது என்​றும் தெரி​வித்​தது.

இதனிடையே, உலகக்​கோப்பை கிரிக்​கெட் தொடரில் வங்​கதேச அணி விளை​யாடும் போட்​டிகளை இந்​தி​யா​வுக்கு வெளியே பொது​வான மைதானத்​தில் நடத்​து​மாறு ஐசிசிக்கு அந்​நாட்டு கிரிக்​கெட் சங்​கம் கடிதம் எழு​தி​யுள்​ளது. வங்​கதேச கிரிக்​கெட் சங்​கத்​தின் இயக்​குநர்​கள் 17 பேர் நேற்று பங்​கேற்ற ஆலோ​சனைக் கூட்​டத்​தில் முடிவு எடுக்​கப்​பட்​டு, இந்​தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து வங்​கதேச கிரிக்​கெட் சங்க இயக்​குநர் கலீத் மசூத் கூறும்​போது, “டி20 உலகக்​கோப்பை கிரிக்​கெட் தொடரில் வங்கதேச அணி விளை​யாடும் போட்​டிகளை இலங்​கைக்கு மாற்று​மாறு கோரிக்கை விடுத்​துள்​ளோம்.

ஐபிஎல் தொடரில் விளை​யாடும் எங்​கள் நாட்​டைச் சேர்ந்த முஸ்டாபிஸுருக்கு பாது​காப்பு வழங்க முடி​யாத போது, எங்​களின் ஒட்​டுமொத்த அணிக்​கும் எப்​படி பாது​காப்பு வழங்க முடி​யும்? இதன் காரண​மாகவே எங்​களின் போட்​டிகளை இந்​தி​யா​வுக்கு வெளியே நடத்த கோரிக்கை விடுத்​துள்​ளோம்' என்​றார்.

பிப்​ர​வரி​யில் தொடங்​கும் டி20 உலகக் ​கோப்பை கிரிக்​கெட் தொடரில் கொல்​கத்​தா​வில் 3 போட்​டிகளி​லும், மும்​பை​யில் ஒரு போட்​டி​யிலும் வங்​கதேசம் விளை​யாட இருந்​தது குறிப்பிடத்தக்கது. ஏற்​கெ​னவே, பாகிஸ்​தான் விளை​யாடும் போட்டிகள் இந்​தி​யா​வுக்கு வெளியே நடத்தப்பட்டு வரும் நிலையில், வங்​கதேச​மும் தற்​போது அதேகோரிக்​கை​யை முன்வைத்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

உலகக் கோப்பை போட்டிகளை இலங்கைக்கு மாற்ற ஐசிசிக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை
தூத்துக்குடி உப்பளங்களில் ஜிப்சம் எடுக்கும் பணி தீவிரம்: போதிய விலை கிடைக்காததால் கவலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in