

பெங்களூரு: விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் லீக் போட்டியில் குஜராத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் ஆந்திரா அணியை வென்றது.
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் குவித்தது. குஜராத் அணி வீரர் அக்சர் படேல் 111 பந்துகளில் 130 ரன்கள் (10 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) விளாசினார். விஷால் ஜெய்ஸ்வால் 70 ரன்கள் குவித்தார்.
பின்னர் விளையாடிய ஆந்திர அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி கண்டது. ஆந்திர அணியின் சிஆர் ஞானேஸ்வர் 102, எஸ்டிஎன்வி பிரசாத் 48 ரன்கள் எடுத்தனர். குஜராத் அணியின் ரவி பிஷ்னோய் 3, அக்சர் படேல், அர்சான் நாக்வாஸ்வாலா ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.