எம்​.டி.​வாசுதேவன் நாயரின் ‘ரெண்​டாம் மூழம்’ நாவலை இயக்​கு​கிறார் ரிஷப் ஷெட்​டி?

எம்​.டி.​வாசுதேவன் நாயரின் ‘ரெண்​டாம் மூழம்’ நாவலை இயக்​கு​கிறார் ரிஷப் ஷெட்​டி?
Updated on
1 min read

பிரபல மலை​யாள எழுத்​தாளர் எம்​.டி.​வாசுதேவன் நாயர் எழு​திய நாவல் ‘ரெண்​டாம் மூழம்’. மகா​பாரதக் கதையை பீமனின் பார்​வை​யில் சொல்​லும் நாவலான இதைத் திரைப்​பட​மாக்க வாசுதேவன் நாயர் முயன்று வந்​தார்.

ஆயிரம் கோடி ரூபாய் பட்​ஜெட்​டில், மோகன்​லால் நடிப்​பில் இக்​கதை, ‘மகா​பாரதம்’ என்ற பெயரில் படமாக இருந்​தது. இதை இயக்க கு​மார் மேனன் ஒப்​பந்​தம் செய்​யப்பட்​டிருந்​தார். தயாரிப்​புப் பணி​யில் ஏற்​பட்ட தாமதம் காரண​மாக, வாசுதேவன் நாயர் அந்த ஒப்​பந்​தத்தை முறித்​து​விட்​டு, திரைக்​கதையைத் திரும்​பப் பெற்​றார்.

இந்​நிலை​யில் ‘காந்​தா​ரா’ ரிஷப் ஷெட்டி இப்​படத்தை இயக்கி நடிக்க இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. இப்​படம் தொடர்​பாக வாசுதேவன்​ நாயரின்​ குடும்​பத்​தினரை ஒன்​றரை வருடத்​துக்​கு முன்​ சந்​தித்​து ஆரம்​பக்​கட்​ட பேச்​சு​வார்த்​தைகளை அவர்​ நடத்​தி​ உள்ளார். இதுதொடர்​பான அதி​காரப்​பூர்​வ அறி​விப்​பு இந்​த வருடம்​ வெளி​யாகலாம்​ என்​கிறார்​கள்​.

எம்​.டி.​வாசுதேவன் நாயரின் ‘ரெண்​டாம் மூழம்’ நாவலை இயக்​கு​கிறார் ரிஷப் ஷெட்​டி?
டெல்லியில் புத்தர் நினைவு கண்காட்சி: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in