ஆஸ்திரேலிய ஓபன்: ஜோகோவிச், இகா ஸ்வியாடெக் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன்: ஜோகோவிச், இகா ஸ்வியாடெக் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
Updated on
2 min read

மெல்பர்ன்: ஆண்​டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்​திரேலிய ஓபன் டென்​னிஸ் ஆஸ்திரேலியா​வின் மெல்​பர்ன் நகரில் நடை​பெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று ஆடவர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் 6-ம் நிலை வீர​ரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 6-2, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்​கில் அமெரிக்​கா​வின் மெக்​கன்சி மெக்​டொ​னால்டை வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

7-ம் நிலை வீர​ரான கனடா​வின் பெலிக்ஸ் ஆகர்​-அலியாசிம், 46-ம் நிலை வீர​ரான போர்ச்​சுகலின் நுனோ போர்​ஹெஸுடன் மோதி​னார். இதில் நுனோ போர்​ஹெஸ் 3-6, 6-4, 6-4 என்ற செட் கணக்​கில் முன்​னிலை​யில் இருந்த போது காயம் காரண​மாக பெலிக்ஸ் ஆகர்​-அலி​யாசிம் வில​கி​னார். 4-ம் நிலை வீரரும் 10 முறை சாம்​பியனு​மான செர்​பி​யா​வின் நோவக் ஜோகோ​விச், ஸ்பெ​யினின் பெட்ரோ மார்​டினெஸுடன் மோதி​னார். இதில் ஜோகோ​விச் 6-2, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று 2-வது சுற்​றில் நுழைந்​தார்.

11-ம் நிலை வீர​ரான ரஷ்​யா​வின் டேனியல் மெத்​வ​தேவ் 7-5, 6-2, 7-6 (7-2) என்ற செட் கணக்​கில் நெதர்​லாந்​தின் ஜெஸ்பர்டி ஜாங்​கை​யும், 13-ம் நிலை வீர​ரான ரஷ்​யா​வின் ஆந்த்ரே ரூப்​லெவ் 6-4, 6-2, 6-3 என்ற செட் கணக்​கில் இத்தாலி​யின் மேட்​டியோ அர்​னால்​டியை​யும், 14-ம்

நிலை வீர​ரான ஸ்பெ​யினின் அலெஜான்ட்ரோ டேவிடோ​விச் ஃபோகினா 6-2, 6-3, 6-3 என்ற செட் கணக்​கில் ஆஸ்திரியா​வின் ஃபிலிப் மிசோலிக்​கை​யும், 19-ம் நிலை வீரரான அமெரிக்​கா​வின் டாமி பால் 6-4, 6-3, 6-3 என்ற செட் கணக்​கில் சகநாட்​டைச் சேர்ந்த அலெக்​சாண்​டர் கோவாசெவிக்​கை​யும் வீழ்த்தி 2-வது சுற்​றில் நுழைந்​தனர்.

சுவிட்​சர்​லாந்​தின் ஸ்டான் வாவ்​ரிங்கா 5-7, 6-3, 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்​கில் செர்​பி​யா​வின் லஸ்லா ஜெரியையும், 21-ம் நிலை வீர​ரான கனடா​வின் டெனிஸ் ஷபோவலோவ் 6-3, 7-6 (7-3), 6-1 என்ற செட் கணக்​கில் சீனாவின் யுஞ்​சோகெட் புவை​யும், குரோஷி​யா​வின் மரின்சிலிச் 6-0, 6-0, 7-6 (7-3) என்ற செட் கணக்​கில் ஜெர்மனியின் டேனியல் அல்ட்​மேயரை​யும் வீழ்த்தி 2-வது சுற்​றில் நுழைந்​தனர்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் 3-ம் நிலை வீராங்கனை​யான அமெரிக்​கா​வின் கோகோ காஃப், உஸ்பெகிஸ்​தானின் கமிலா ரகிமோவை எதிர்​கொண்​டார். இதில் கோகோ காஃப் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். 4-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் அமன்டா அனிசிமோவா 6-3, 6-2 என்ற செட் கணக்​கில் சுவிட்சர்லாந்தின் சிமோனா வால்​டெர்ட்​டை​யும்,

6-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் ஜெசிகா பெகுலா 6-2, 6-1 என்ற செட் கணக்​கில் ரஷ்​யா​வின் அனஸ்டசியா ஜகரோ​வாவை​யும் வீழ்த்​தினர்.

15-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் எம்மா நவர்ரோ 6-3, 3-6, 3-6 என்ற செட் கணக்​கில் போலந்​தின் மெக்டா லின்​னெட்​டிட​மும், 27-ம் நிலை வீராங்​க​னை​யும் முன்​னாள் சாம்​பியனு​மான அமெரிக்​கா​வின் சோபியா கெனின் 3-6, 2-6 என்ற செட் கணக்​கில் சகநாட்​டைச் சேர்ந்த பெய்​டன் ஸ்டெர்ன்​ஸிட​மும் தோல்வி அடைந்​தனர். 14-ம் நிலை வீராங்​க​னை​யான டென்​மார்க்​கின் கிளாரா டவுசன் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்​கில் ஹங்​கேரி​யின் டல்மா கல்ஃபியை​யும், 19-ம் நிலை வீராங்​க​னை​யான செக்​குடியரசின் கரோலினா முச்​சோவா 6-3, 7-6 (8-6) என்ற செட் கணக்​கில் ருமேனி​யா​வின் ஜாக்​லின் கிறிஸ்​டியனை​யும் வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறினர்.

2-ம் நிலை வீராங்​க​னை​யான போலந்​தின் இகா ஸ்வியாடெக் 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்​கில் 130-ம் நிலை வீராங்​க​னை​யான சீனா​வின் யு யுவானை​யும், 8-ம் நிலை வீராங்​க​னை​யான ரஷ்​யா​வின் மிர்ரா ஆண்ட்​ரீவா 4-6, 6-3, 6-0 என்ற செட் கணக்​கில் குரோஷி​யா​வின் டோனா வெகிக்கை​யும், 17-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்கா​வின் விக்​டோரியா எம்​போகோ 6-4, 6-1 என்ற செட் கணக்​கில் ஆஸ்​திரேலி​யா​வின் எமர்​சன் ஜோன்​ஸை​யும், 13-ம் நிலை வீராங்​க​னை​யான செக்​குடியரசின் லின்டா நோஸ்கோவா 6-3, 6-0 என்ற செட் கணக்​கில் லத்வியா​வின்​ தர்​ஜா செமனிஸ்​டாஜாவை​யும்​ வீழ்த்​தி 2-வது சுற்​றுக்​கு முன்னேறினர்.

ஆஸ்திரேலிய ஓபன்: ஜோகோவிச், இகா ஸ்வியாடெக் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
பதற்றமான இறுதி ஆட்டத்தில் மொராக்கோவை வீழ்த்தி பட்டம் வென்ற செனகல் - Africa Cup of Nations

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in