அல்​க​ராஸ், அரினா சபலென்கா​வுக்கு ஆஸி. ஓபன் தரவரிசையில் முதலிடம்

அல்​க​ராஸ், அரினா சபலென்கா​வுக்கு  ஆஸி. ஓபன் தரவரிசையில் முதலிடம்
Updated on
1 min read

மெல்​பர்ன்: ஆண்​டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்​டி​யான ஆஸ்​திரேலிய ஓபன் டென்​னிஸ் வரும் 18-ம் தேதி ஆஸ்​திரேலி​யா​வின் மெல்​பர்ன் நகரில் தொடங்​கு​கிறது.

இந்​நிலை​யில் இந்த போட்​டிக்​கான வீரர், வீராங்​க​னை​களின் தரவரிசை நேற்று அறிவிக்​கப்​பட்​டது. ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸுக்கு முதலிடம் வழங்​கப்​பட்​டுள்​ளது. 2 முறை சாம்​பிய​னான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னருக்கு 2-வது இடமும் ஜெர்​மனி​யின் அலெக்​ஸாண்​டர் ஜிவேரேவுக்கு 3-வது இடமும், 10 முறை சாம்​பிய​னான செர்​பி​யா​வின் நோவக் ஜோகோ​விச்​சுக்கு 4-வது இடமும் கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

இத்​தாலி​யின் லோரென்சோ முசெட்​டி, ஆஸ்​திரேலி​யா​வின் அலெக்ஸ் டி மனார், கனடாவின் பெலிக்ஸ் ஆகர்​-அலி​யாசிம், அமெரிக்​கா​வின் பென் ஷெல்​டன், டெய்​லர் ஃபிரிட்​ஸ், கஜகஸ்​தானின் அலெக்​சாண்​டர் பப்​ளிக் ஆகியோர் முறையே 5 முதல் 10-வது இடங்​களில் உள்​ளனர்.

மகளிர் ஒற்​றையர் பிரி​வில் பெலாரஸின் அரினா சபலென்​கா, போலந்​தின் இகா ஸ்வி​யாடெக், அமெரிக்​கா​வின் கோ கோ காஃப் ஆகியோ​ருக்கு முறையே முதல் 3 இடங்​கள் கொடுக்​கப்​பட்​டுள்​ளன. நடப்பு சாம்​பிய​னான அமெரிக்​கா​வின் மேடிசன் கீஸுக்கு 9-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

அல்​க​ராஸ், அரினா சபலென்கா​வுக்கு  ஆஸி. ஓபன் தரவரிசையில் முதலிடம்
“நாட்டின் கோதுமை உற்பத்தி புதிய சாதனை படைக்கும்” - அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in