ஆஸ்​திரேலிய முன்​னாள் வீரர் டேமியன் மார்ட்​டின் மருத்​து​வ​மனை​யில் அனு​மதி

ஆஸ்​திரேலிய முன்​னாள் வீரர் டேமியன் மார்ட்​டின் மருத்​து​வ​மனை​யில் அனு​மதி
Updated on
1 min read

பிரிஸ்​பேன்: ஆஸ்​திரேலிய அணி​யின் முன்​னாள் கிரிக்​கெட் வீரர் டேமியன் மார்ட்​டின்​ (54) மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் அவரது உடல்​நிலை மோச​மாக உள்​ள​தாகத் தெரிய​வந்​துள்​ளது.

மூளைக்​காய்ச்​சலால் அவதிப்​பட்டு வரும் அவர் கடந்த 26-ம் தேதி பிரிஸ்​பேனில் உள்ள கோல்ட் கோஸ்ட் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். அவருக்கு மருத்​து​வர்​கள் தொடர்ச்​சி​யாக சிகிச்சை அளித்து வரு​கின்​றனர். அவர் தற்​போது கோமா நிலை​யில் உள்ளார்.

இந்​நிலை​யில் நேற்று அவரது உடல்​நிலை மோசம் அடைந்​த​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​துள்​ளனர். இதைத்தொடர்ந்து அவர் விரை​வில் குணமடைந்து வீடு திரும்ப வேண்​டும் என்று ஆஸ்​திரேலிய முன்​னாள் வீரர்​கள் ஆடம் கில்​கிறைஸ்ட், ஸ்டீவ் வாஹ், மார்க் வாஹ் உள்​ளிட்​டோர் தெரி​வித்​துள்​ளனர்.

ஆஸ்​திரேலிய முன்​னாள் வீரர் டேமியன் மார்ட்​டின் மருத்​து​வ​மனை​யில் அனு​மதி
வந்தே பாரத் ரயி​லின் 180 கி.மீ. அதிவேக சோதனை வெற்றி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in