முதல் முறையாக ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்தார் மிட்செல் ஸ்டார்க்

மிட்செல் ஸ்டார்க்

மிட்செல் ஸ்டார்க்

Updated on
1 min read

துபாய்: ஐசிசி டெஸ்ட் கிரிக்​கெட் பந்து வீச்​சாளர்​களுக்​கான தரவரிசை​யில் ஆஸ்​திரேலிய அணி​யின் வேகப்​பந்து வீச்​சாள​ரான மிட்​செல் ஸ்டார்க் முதன்​முறை​யாக முதலிடம் பிடித்​துள்​ளார்.

வங்​கதேச அணிக்கு எதி​ராக சமீபத்​தில் முடிவடைந்த 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் மிட்​செல் ஸ்டார்க் 12 விக்​கெட்​களை வீழ்த்​தி​யிருந்​தார். இதன் மூலம் இந்​தி​யா​வின் ஜஸ்​பிரீத் பும்​ரா, நியூஸிலாந்​தின் மேட் ஹென்றி ஆகியோரை பின்​னுக்​குத்​தள்ளி 2 இடங்​கள் முன்​னேறி முதலிடத்தை பிடித்​துள்​ளார் மிட்​செல் ஸ்டார்க்.

36 வயதான இடதுகை வேகப்​பந்து வீச்​சாள​ரான மிட்​செல் ஸ்டார்க் 872 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் உள்​ளார். பும்ரா 862 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் இருந்து 2-வது இடத்​துக்கு தள்​ளப்​பட்​டுள்​ளார். மேட் ஹென்றி 861 புள்​ளி​களு​டன் 2-வது இடத்​தில் இருந்து 3-வது இடத்​துக்கு இறங்கி உள்​ளார்.

மிட்​செல் ஸ்டார்க் ஐசிசி தரவரிசை​யில் முதலிடத்தை பிடிப்​பது இதுவே முதன்​முறை​யாகும். இதற்கு முன்​னர் அதி​கபட்​ச​மாக கடந்த ஆண்டு 2-வது இடத்தை பிடித்​திருந்​தார்.

கடந்த ஜூலை மாதம் இங்​கிலாந்து தொடரின் போது ஏற்​பட்ட முழங்​கால் காயம் காரண​மாக இலங்கை தொடரிலிருந்து வில​கிய பும்​ரா, தற்​போது இரண்​டாவது இடத்​திற்​குச் சரிந்​துள்​ளார். பும்ரா இது​வரை மொத்​தம் 697 நாட்​கள் முதலிடத்​தில் நீடித்​துள்​ளார். இது இந்​திய பந்​து​வீச்​சாளரின் மிக நீண்ட சாதனை​யாகும்.

இங்​கிலாந்து அணி​யின் ஆலி ராபின்​சன் 15 இடங்​கள் முன்​னேறி 11-வது இடத்தை பிடித்​துள்​ளார். பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான முதல் டெஸ்ட் போட்​டி​யில் ஆலி ராபின்​சன் 8 விக்​கெட்​களை கைப்​பற்​றி​யிருந்​தார். இதே போட்​டி​யில் 8 விக்​கெட்​கள் கைப்​பற்​றிய ஜோஷ் டங் 16 இடங்​கள் முன்​னேறி 17-வது இடத்தை அடைந்​துள்​ளார். இலங்கை அணிக்கு எதி​ரான முதல் டெஸ்ட் போட்​டி​யில் 10 விக்​கெட்​கள் கைப்​பற்​றிய இந்​தி​யா​வின் மானவ் சுதார் 28 இடங்​கள் முன்​னேறி 48-வது இடம் பிடித்​துள்​ளார்.

இலங்கை அணி​யின் அசிதா பெர்​னாண்​டோ, பிர​பாத் ஜெயசூரியா ஆகியோர் தலா 5 இடங்​கள் முன்​னேறி முறையே 15 மற்​றும் 16-வது இடங்​களில் உள்​ளனர். ஆஸ்​திரேலிய அணி​யின் சுழற்​பந்து வீச்​சாள​ரான நேதன் லயன் 2 இடங்​கள் முன்​னேறி 10-வது இடத்​தை​யும், பாகிஸ்​தானின் அலி உஸ்​மான் 30 இடங்​கள் முன்​னேறி 67-வது இடத்​தை​யும்​ பிடித்​துள்​ளனர்.

<div class="paragraphs"><p>மிட்செல் ஸ்டார்க்</p></div>
அமெரிக்க ஓபனில் களமிறங்கும் வில்லியம்ஸ் சகோதரிகள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in