இங்கிலாந்துக்கு எதிரான சிட்னி டெஸ்ட்: டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன் அபார ஆட்டம்

டிராவிஸ் ஹெட்

டிராவிஸ் ஹெட்

Updated on
2 min read

சிட்னி: இங்கிலாந்துக்கு எதி​ரான 5-வது மற்​றும் கடைசி கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யில் ஆஸ்​திரேலிய அணி முதல் இன்​னிங்​ஸில் 2 விக்​கெட் இழப்​புக்கு 166 ரன்​கள் எடுத்​துள்​ளது. முன்​ன​தாக இங்​கிலாந்து அணி முதல் இன்​னிங்​ஸில் 384 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. ஜோ ரூட் அபாரமாக விளை​யாடி சதம் விளாசி​னார்.

ஆஸ்​திரேலி​யா, இங்​கிலாந்து அணி​களுக்கு இடையி​லான ஆஷஸ் கிரிக்​கெட் டெஸ்ட் தொடரில் ஆஸ்​திரேலியா 3-1 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் உள்​ளது. இந்​நிலை​யில் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்​தில் கடந்த 4-ம் தேதி தொடங்​கியது. பிங்க் பால் டெஸ்ட் போட்​டி​யான இந்த ஆட்​டத்​தில் இங்​கிலாந்து அணி முதலில் விளை​யாடியது.

முதல் நாள் ஆட்​டத்​தில் அந்த அணி 3 விக்​கெட் இழப்​புக்கு 211 ரன்​கள் எடுத்​திருந்​த​போது வெளிச்​சமின்மை காரண​மாக நிறுத்​தப்​பட்​டது. தொடர்ந்து மழை பெய்​யவே முதல் நாள் ஆட்​டம் அத்​துடன் முடிவுக்கு வந்​தது. இந்​நிலை​யில் நேற்​றைய 2-ம் நாள் ஆட்​டத்தை ஜோ ரூட் 72 ரன்​களு​ட​னும், ஹாரி புரூக் 78 ரன்​களு​ட​னும் தொடங்​கினர்.

மேலும் 6 ரன்​கள் சேர்த்த நிலை​யில் ஹாரி புரூக், ஸ்காட் போலண்ட் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். அவர் 97 பந்​துகளில் 84 ரன்​கள் சேர்த்​தார். இதையடுத்து ரூட்​டுடன் ஜோடி சேர்ந்த, கேப்​டன் பென் ஸ்டோக்​ஸ், ரன் கணக்​கைத் தொடங்​காமலேயே மிட்​செல் ஸ்டார்க் பந்​தில் வீழ்ந்​தார். இதைத் தொடர்ந்து ரூட்​டுடன் விக்​கெட் கீப்​பர் ஜேமி ஸ்மித் இணைந்​தார். அவர் நிதான​மாக விளை​யாடி ரன்​களை சேர்த்​தார். இதனிடையே ஜோ ரூட் அபார​மாக விளை​யாடி டெஸ்ட் போட்​டிகளில் தனது 41-வது சதத்தை பூர்த்தி செய்​தார். அவர் 146 பந்​துகளில் சதத்தை எட்​டி​னார்.

ஜோ ரூட், ஜேமி ஸ்மித் ஜோடி அபார​மாக விளை​யாடி 6-வது விக்​கெட்​டுக்கு 94 ரன்​களைச் சேர்ந்​தது. ஜேமி ஸ்மித் 46 ரன்​களை எடுத்​திருந்​த​போது, லபுஷேன் பந்​தில் போலண்​டிடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார்​.உணவு இடைவேளை​யின்​போது இங்​கிலாந்து அணி 6 விக்​கெட் இழப்​புக்கு 336 ரன்​கள் எடுத்​திருந்​தது.

இதன் பின்​னர் வந்த வீரர்​கள் வில் ஜேக்ஸ் 27, பிரைடன் கார்ஸ் 1, ஜோஷ் 0 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். ஜோ ரூட் 160 ரன்​கள்​(242 பந்​துகள், 15 பவுண்​டரி​கள்) சேர்த்து நேசர் பந்​தில் அவுட்​டா​னார். 97.3 ஓவர்​களில் 384 ரன்​களுக்கு இங்​கிலாந்​தின் முதல் இன்​னிங்ஸ் முடிவுக்கு வந்​தது.

இங்​கிலாந்து அணி தரப்​பில் மைக்​கேல் நேசர் 4, மிட்​செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட் ஆகியோர் தலா 2, கேமரூன் கிரீன், லபுஷேன் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டைக் கைப்​பற்​றினர். இதைத் தொடர்ந்து ஆஸ்​திரேலிய அணி தனது முதல் இன்​னிங்ஸை தொடங்​கியது. தொடக்க ஆட்​டக்​காரர்​களாக டிரா​விஸ் ஹெட்​டும், ஜேக் வெத​ரால்​டும் களமிறங்​கினர். அதிரடி​யாக ஆட முற்​பட்ட வெத​ரால்டு 36 பந்​துகளில் 21 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஸ்டோக்ஸ் பந்​தில் எல்​பிடபிள்யூ முறை​யில் ஆட்​ட​மிழந்​தார்.

இதையடுத்து ஹெட்​டுடன் ஜோடி சேர்ந்த, மார்​னஸ் லபுஷேன் சிறப்​பாக விளை​யாடி இன்​னிங்ஸை கட்​டமைத்​தார். லபுஷேன் நிதான​மாக விளை​யாடி​னாலும், டிரா​விஸ் ஹெட் அதிரடி​யாக விளை​யாடி பவுண்​டரி​களை பறக்​க​விட்டு அரை சதம் கடந்​தார்​.அரை சதத்தை நெருங்​கிய வேளை​யில் லபுஷேன், ஸ்டோக்ஸ் பந்​தில் ஜேக்​கப் பெத்​தேலிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்​தார். அவர் 68 பந்​துகளில் 48 ரன்​களைச் சேர்த்​திருந்​தார்.

2-வது விக்​கெட்​டுக்கு இந்த ஜோடி 105 ரன்​கள் சேர்த்​திருந்​தது. ஆட்​டநேர இறு​தி​யில் ஆஸ்​திரேலிய அணி 34.1 ஓவர்​களில் 2 விக்​கெட் இழப்​புக்கு 166 ரன்​கள் எடுத்​திருந்​தது. ஹெட் 91 ரன்​களு​ட​னும், மைக்​கேல் நேசர் ஒரு ரன்​னுட​னும் களத்​தில் இருந்​தனர்​.இங்​கிலாந்து கேப்​டன் பென் ஸ்டோக்​ஸ், 2 விக்​கெட்​களைக் கைப்​பற்​றினர்​.218 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் இன்​று 3-ம்​ நாள்​ ஆட்​டத்​தை ஆஸ்​திரேலிய அணி விளையாடி வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 12-வது சதத்தை பதிவு செய்தார் டிராவிஸ் ஹெட். இந்த தொடரில் மொத்தமாக மூன்று சதங்களை அவர் பதிவு செய்தார்.

ரிக்கி பாண்டிங்கின் சாதனை சமன்: டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் குவித்தவர்கள் வரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்குடன் இணைந்துள்ளார்.

நேற்றைய போட்டியில் ஜோ ரூட் தனது 41-வது சதத்தை விளாசினார். மேலும் இந்த ஆஷஸ் தொடரில் அவர் அடித்த 2-வது சதமாகும் இது.

அதிக சதங்கள் குவித்தவர்கள் வரிசையில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (51 சதங்கள்) முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்க வீரர் ஜாக்கஸ் காலிஸ் (45 சதங்கள்) 2-வது இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் (41 சதங்கள்) 3-வது இடத்திலும் உள்ளனர். இந்த வரிசையில் தற்போது ரிக்கி பாண்டிங்குடன் ஜோ ரூட் 41 சதங்களுடன் இணைந்துள்ளார்.

அதிக 150 பிளஸ் ஸ்கோர்: மேலும், டெஸ்ட் போட்டிகளில் அதிக 150 பிளஸ் ஸ்கோர்களைக் குவித்தவர்கள் வரிசையிலும் ஜோ ரூட் இணைந்துள்ளார். ஜோ ரூட் 17 முறை 150-க்கும் அதிகமான ரன்களை டெஸ்ட் போட்டிகளில் சேர்த்துள்ளார்.

இந்த வரிசையில் 20 முறை 150-க்கும் அதிகமான ரன்களை எடுத்து சச்சின் டெண்டுல்கர் முதலிடமும், 19 முறை எடுத்து பிரையன் லாரா 2-ம் இடமும், 19 முறை 150 பிளஸ் ஸ்கோர் எடுத்து குமார் சங்கக்காரா 3-ம் இடமும், 18 முறை 150 பிளஸ் ஸ்கோர் குவித்து டான் பிராட்மேன் 4-வது இடத்திலும் உள்ளனர். ஜோ ரூட் இந்த வரிசையில் 5-வது இடத்தில் இருக்கிறார்.

அதேபோல் 2021-ம் ஆண்டுக்குப் பிறகு அதிக அளவில் டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட் சதமடித்துள்ளார். 2021-க்குப் பிறகு ஜோ ரூட் 24 சதங்களை டெஸ்ட் போட்டிகளில் விளாசியுள்ளார்.

<div class="paragraphs"><p>டிராவிஸ் ஹெட்</p></div>
‘ஜனநாயகன்’ வெற்றி பெற விஜய், படக்குழுவுக்கு ரவி மோகன் வாழ்த்து!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in