‘ஜனநாயகன்’ வெற்றி பெற விஜய், படக்குழுவுக்கு ரவி மோகன் வாழ்த்து!

‘ஜனநாயகன்’ வெற்றி பெற விஜய், படக்குழுவுக்கு ரவி மோகன் வாழ்த்து!
Updated on
1 min read

வரும் 9-ம் தேதி வெளியாகவுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெற்றி பெற அந்த படத்தின் நாயகன் விஜய் மற்றும் படக்குழுவினருக்கு நடிகர் ரவி மோகன் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவர் வில்லனாக நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் வரும் 10-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சமூக வலைதளத்தில் ரவி மோகன் கூறியுள்ளதாவது: “தளபதி வெற்றி கொண்டான். ஜனநாயகன் பட ட்ரெய்லரில் அண்ணன் விஜய்யின் பாத்திரம் யதார்த்தமானதாக உள்ளது. இந்தப் படம் நிச்சயம் என்னை மட்டுமல்லாது பலரது மனங்களை வெல்லும். நான் என்றென்றும் உங்கள் ரசிகன், சகோதரன். படம் வெற்றி பெற இயக்குநர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

பொங்கல் விழாவை முன்னிட்டு ஜனநாயகன் மற்றும் பராசக்தி படங்கள் வெளியாகின்றன. இதில் ஜனநாயகன் படத்தில் விஜய் உடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது ‘ஜனநாயகன்’. கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குநராக அனல் அரசு பணியாற்றி உள்ளார்.

‘பராசக்தி’ படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார். ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயன் உடன் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.

‘ஜனநாயகன்’ வெற்றி பெற விஜய், படக்குழுவுக்கு ரவி மோகன் வாழ்த்து!
“உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தால் அரசு ஊழியர்களுக்கு பலனில்லை” - கிருஷ்ணசாமி கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in