

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் பரிசுத் தொகை இந்த ஆண்டில் 16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு ஆண்டிலும் முதலாவதாக நடத்தப்படுவது ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியாகும். இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 18-ம் தேதி மெல்பர்னில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு போட்டிக்கான பரிசுத் தொகை 16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் நேற்று தெரிவித்தனர். அதாவது பரிசுத்தொகை 11.15 கோடி ஆஸ்திரேலிய டாலர்கள் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.674 கோடியாகும்.