மதுவுக்கு அடிமையான கணவரால் பிரச்சினை: 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

மதுவுக்கு அடிமையான கணவரால் பிரச்சினை: 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
Updated on
1 min read

வருசநாடு: மதுவுக்கு அடிமை​யான கணவ​ரால் விரக்​தி​யடைந்த பெண், தனது 2 குழந்​தைகளு​டன் தற்​கொலை செய்து கொண்​டார். தேனி மாவட்​டம் வருச​நாடு அருகே​யுள்ள தண்​டியன்​குளம் கிராமத்​தைச் சேர்ந்​தவர் ஜெயபெரு​மாள்​(40). தொழிலா​ளி. இவரது மனைவி தனலட்​சுமி, குழந்​தைகள் தேவா (7), நீதி (2).

ஜெயபெரு​மாள் மதுப் பழக்​கத்​துக்கு அடிமை​யாகி, தின​மும் குடித்து விட்டு வீட்​டில் தகராறு செய்​துள்​ளார். குடும்​பச் செலவுக்​கும் பணம் தராத​தால் அடிக்கடி பிரச்​சினை ஏற்​பட்​டது.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு மது குடித்​து​விட்டு வந்​த​தால், குடும்​பத்​தில் பிரச்​சினை அதி​கரித்​தது. இதனால் மன உளைச்​சலுக்கு உள்​ளான தனலட்​சுமி நேற்று அதி​காலை தனது 2 குழந்​தைகளு​டன், ஒரு விவ​சாயக் கிணற்​றில் குதித்து தற்​கொலை செய்து கொண்​டார்.

அவர்​களது உடல்​கள் கிணற்​றில் மிதப்​ப​தைக் கண்ட அப்​பகுதி மக்​கள், வருச​நாடு காவல் நிலை​யத்​துக்​குத் தகவல் தெரி​வித்​தனர். தகவலறிந்து வந்த போலீ​ஸார், தீயணைப்​புத் துறை​யினர் உதவி​யுடன் 3 பேரின் உடல்களை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக தேனி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். தொடர்ந்து விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

மதுவுக்கு அடிமையான கணவரால் பிரச்சினை: 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
​பாலியல் புகார் அளித்த பெண் மீது வன்கொடுமை வழக்கு: காவல் துணை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in