ஆஸி. இளம் அணி சென்னையில் பயிற்சி

ஆஸி. இளம் அணி சென்னையில் பயிற்சி
Updated on
1 min read

மெல்பர்ன்: எம்​ஆர்​எஃப் அகாடமி திட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக ஆஸ்திரேலிய ஆடவர் வளர்ச்சி அணி அடுத்த மாதம் சென்னை வரு​கிறது. அந்த அணி ஆகஸ்ட் 1 முதல் 13 வரை சென்னையில் 2 நாட்​கள் கொண்ட இரு போட்​டிகளில் விளை​யாட உள்​ளது. இந்த ஆட்​டங்​கள் சுழற்​பந்து வீச்​சுக்கு சாதக​மான ஆடு​களங்​களில் ஆகஸ்ட் 5–6 மற்​றும் 10–11-ம் தேதி​களில் நடை​பெறுகின்​றன.

இந்த போட்​டிகளுக்​கான ஆஸ்​திரேலிய வளர்ந்து வரும் அணி​யில் இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த வீரர்​களான ஆரியன் சர்​மா, ஜேசன் சங்கா ஆகியோர் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். எம்​ஆர்​எஃப் அகாடமி திட்​டத்​தில் பங்​கேற்​கும் வளர்ந்து வரும் அணிக்​கு, ஆஸ்​திரேலிய முன்​னாள் கேப்​டன் டிம் பெய்ன், அந்​தோணி கிளார்க் ஆகியோர் பயிற்​றுநர்​களாகச் செயல்​படு​வார்​கள் என அந்​நாட்டு கிரிக்​கெட் வாரி​யம் தெரி​வித்​துள்​ளது.

ஆஸி. இளம் அணி சென்னையில் பயிற்சி
காவிரி அணைகளை கையாளும் அதிகாரத்துடன் புதிய மேலாண்மை வாரியம் அமைக்க அன்புமணி வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in