

ஆக்லாந்து: நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் ஆக்லாந்து ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்தது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, சுவீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடியானது, ஆஸ்திரேலியாவின் அலெக்சாண்டர் எர்லர், அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் யுகி பாம்ப்ரி இணை 4- 6, 6- 4, (8-10) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.