

நகோயா: 5-வது ஆசிய பாரா விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் கடந்த 18-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தத் தொடரில் இந்தியா 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என 114 பதக்கங்களை குவித்து 4-வது இடம் பிடித்தது.
சீனா 207 தங்கம், 117 வெள்ளி, 111 வெண்கலம் என 435 பதக்கங்களை குவித்து முதலிடம் பிடித்தது. ஜப்பான் 64 தங்கம், 60 வெள்ளி, 62 வெண்கலத்துடன் 2-வது இடமும், உஸ்பெகிஸ்தான் 45 தங்கம், 49 வெள்ளி, 51 வெண்கலத்துடன் 3-வது இடமும் பிடித்தன.