11 வயதில் சர்வதேச மாஸ்டர் பட்டம்: இந்திய வம்சாவளி சிறுமி சாதனை

11 வயதில் சர்வதேச மாஸ்டர் பட்டம்: இந்திய வம்சாவளி சிறுமி சாதனை
Updated on: 
1 min read

லண்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து செஸ் வீராங்கனை போதனா சிவானந்தன், 11 வயதில் சர்வதேச மாஸ்டர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

வடக்கு லண்டனின் ஹாரோ பகுதியில் வசிக்கும் போதனா, ஐரோப்பிய மகளிர் செஸ் கிளப் கோப்பை தொடரில் கடைசி சுற்றில் வெற்றி பெற்று இந்தச் சாதனையை நிகழ்த்தி உள்ளார். இதன்மூலம், சர்வதேச மாஸ்டர் பட்டம் பெற்ற இளம் வயது வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

இதற்கு முன்னர் ஹங்கேரி முன்னாள் செஸ் வீராங்கனை ஜூடித் போல்கர் தனது 12 வயதில் 1988-ம் ஆண்டு சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்றதே சாதனையாக இருந்தது. இதை தற்போது 38 வருடங்களுக்கு பிறகு முறியடித்துள்ளார் போதனா.

11 வயதில் சர்வதேச மாஸ்டர் பட்டம்: இந்திய வம்சாவளி சிறுமி சாதனை
சீக்கியர் படுகொலை நினைவு நாளில் போராட்டம் நடத்துவது நியாயமா? - ராகுலிடம் பாஜக கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in